×
 

எடுத்த படம் எல்லாம் ஹிட்டு.. தோல்வியா என்னக்கா நெவர்.. யார் அந்த இயக்குநர்..?

ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூல் கொடுத்த இயக்குநர் படம் ஒன்று கூட தோல்வி இல்லை என்றால் நம்ப முடிகிறதா..! 

யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன் என்பது போல, எந்த படமாக இருந்தாலும் அதனை தன் பாணியில் எடுத்து ஹிட் கொடுப்பவர் என்ற தான் அட்லீ. இவர் இயக்கிய எந்த படமும் தோல்வி அடைந்தது இல்லை. பார்க்க கருப்பாக ஒல்லியாக இருக்கிறானே இவன் என்ன செய்வான் என்று சொன்னவர்களுக்கு "சொல்வதை விட செயல் " முக்கியம் என்ற வார்த்தைக்கு இணங்க தனது படைப்பில் பதிலடி கொடுத்தவர் அட்லீ. என்ன செய்தாலும் அட்லீக்கு விமர்சனம் தான். தற்போது பேபி ஜான் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அட்லீயை பார்த்து "நீங்கள் ஹீரோக்களை பார்க்க செல்லும்போது உங்களை எங்கு தேடுவார்கள் என நக்கலாக கேட்டதற்கு, கூலாக என்னுடைய முதல் படைப்பை ஏ.ஆர் முருகதாஸிடம் கொடுக்க சென்ற போது அவர் என் உருவத்தை பார்க்கவில்லை என்னுடைய ஸ்கிரிப்டை தான் பார்த்தார் என கூறியிருப்பார். அப்படி அட்லீயின் சோதனை, விமர்சனங்களை கடந்த கடும் உழைப்பு இன்று அவரை மாட மாளிகையில் உட்கார வைத்து அழகு பார்த்து இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. 

இத்தனை புகழுக்கும் சொந்தக்காரனான அட்லீ, இயக்குநர் ஷங்கரிடம், விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் மற்றும் ரஜினியின் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஷங்கரின் முழுவித்தையையும் கற்று தேர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் அட்லீ இயக்கிய முதல் படம் "முகப்புத்தகம்" இந்த குறும்படத்தில் கதாநாயகனாக சிவர்கார்த்திகேயன் நடித்து இருப்பார்.

இதையும் படிங்க: பயந்தா நாங்க பொறுப்பில்ல.. கும்பமேளாவில் திகிலூட்டும் திரில்லர் டீசர்..! மச்சக்காரி தமன்னாவ மந்தராவதி ஆக்கிட்டியே டேரக்டரு..!

உதவி இயக்குனராக இருந்த அட்லீ 2013ம் ஆண்டு வெள்ளித்திரையில் முதல் இயக்குனராக "ராஜா ராணி" திரைப்படத்தில் மொழிபெயர்ப்பு. இது "தி கிங் அண்ட் குயின்" படத்தின் காப்பியாக இருந்தாலும் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஏஆர் முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நஜிம் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், சந்தானம், சத்யன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அட்லீக்கு முதல் படியாக அமைந்தது.

அட்லீயின் இரண்டாவது திரைப்படம் தெறி, 2016வது வருடம் கலைப்புலி எசு.தாணுவிஜய் தயாரிப்பில், அட்லீ இயக்கியத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிப்பில் உருவான திரைப்படம். இந்த படம் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து அட்லீயை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது.

அட்லீயின் மூன்றாவது திரைப்படம் மெர்சல், 2017 தீபாவளி அன்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீயின் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெறித்தனமான இசையில் விஜய், காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா, வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், கோவை சரளா, ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இப்பத்தில் "மதராஸி நஹி மதுர வாசி" என்ற டைலாக் சொன்னதும் விஜயின் எண்ட்ரி காட்சிக்கு திரையரங்கமே அதிர்ந்தது.   

அட்லீயின் நான்காவது திரைப்படம் "பிகில்", 2019 தீபாவளிக்கு முன்தினம் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிபில், அட்லீ இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசையில், விஜய், நயன்தாரா, விவேக், ஜாக்கி செராப், கதிர், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடி வசூலை அள்ளி தந்தது. 

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுப்பார் அட்லீ என அனைவரும் கூறிக்கொண்டு இருக்கையில் தனது குருவான ஷங்கர் செய்த ஒரு காரியத்தை அட்லீ செய்தார், அதுதான் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தது. பாலிவுட்டில் எடுத்தவுடனே ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை எடுத்தார்.

படம் ஓடாது என்று விமர்சனம் செய்தவர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. இதனை தொடர்ந்து தற்போது தன்னுடைய தெறி படத்தை "பேபி ஜான்" என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டு உள்ளார். அந்த படமும் நல்ல ஹிட் கொடுத்துள்ளது.


 

இதையும் படிங்க: அப்ப நடிகை.. இப்ப டைரக்டர்...! கவர்ச்சி நடிகையின் கவர வைக்கும் திரைப்படம்...! சும்மா அதிருதுல்ல..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share