×
 

திரையில் தான் நீங்க ஹீரோ; இதுல நீங்க ஜீரோ... விஜய்யை விளாசிய போஸ் வெங்கட்!!

தவெக தலைவர் விஜய் அண்மையில் திமுக குறித்து பேசியதற்கு அக்கட்சியின் ஆதரவாளரும் நடிகருமான போஸ் வெங்கட் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. கட்சி ஆரம்பித்த பிறகு பரந்தூருக்கு சென்றதைத் தவிர விஜய் பெரிய அளவில் வேறு ஏதும் செய்யாததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார்.

இது பேசுபொருளாக மாறியது. இதனிடையே திருவள்ளூரில் தவெகவின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய், பெயரை சொல்ல பயப்படுகிறேன் என்று சொல்கிறார்கள். திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே. பேச்சில் மட்டும் இருக்கக்கூடாது. செயலிலும் காண்பிக்க வேண்டும். ஒரு படத்தில் லியோவை காணும் லியோவை காணும் என்று நான் சொல்வது போல்; இவர்களோ பெயரை சொல்லமாட்றாரு சொல்லமாட்றாரு என என்னை சொல்கிறார்கள். அதேபோல் இங்கு மன்னர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

இதையும் படிங்க: நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் "லுக் டெஸ்ட்" காட்சிகள் வெளியாகி உள்ளது..!

அந்த வகையில் இதுக்குறித்து பேசிய நடிகரும் திமுகவின் ஆதரவாளருமான போஸ் வெங்கட், ஆம் இங்கு மன்னர் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு வரும் கூட்டமெல்லாம் இளைஞர் கூட்டம். ஏனெனில் நீங்கள் நடிகர். நீங்கள் நடிகராக இருக்கும்வரை இந்தக் கூட்டம் கூடும். ஆனால் நீங்கள் உங்களை எம்ஜிஆரோடு ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். நீங்கள் ஒன்றும் எம்ஜிஆர் இல்லை. அதற்கு எடுத்துக்காட்டை நானே பேசியிருக்கிறேன். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த சிரஞ்சீவிக்கு என்ன கொடுமை நடந்ததோ அதே கொடுமை உங்களுக்கும் நடக்கும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

ஜோசப் விஜய் நெருப்பில் கால் வைத்துவிட்டார். சூறாவளியில் தலையை விட்டுவிட்டார். அவர் சரியாக பேசுகிறார் என்று பலர் சொன்னதெல்லாம்தான் இன்று மீம்ஸ்களாக வந்துகொண்டிருக்கின்றன. 14 வயதில் நீங்கள் (விஜய்) உங்கள் தந்தையின் திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள். 16 வயதில் நாம் கதாநாயகனாக மாறினால் என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தீர்ப்பீர்கள்.

அனைத்தும் உங்களை பற்றி எனக்கு தெரியும். ஏனெனில் நானும் அங்கிருந்துதான் வந்திருக்கிறேன் ஜோசப் விஜய் அவர்களே. இந்த வயதில் வந்து தனக்கு திமுகதான் போட்டி என்று சொல்கிறீர்கள் அதெல்லாம் எந்த வகையில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நீங்களே ஒரு வாரிசுதான்: நீங்கள் 20 வயதில் நடிக்க வந்தீர்கள். இப்போது 50 வயதாகிறது. இந்த வருடங்களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். அது உங்களுக்கே தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்று சொல்கிறீர்கள். தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை என்ன. அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறதா?

திரைத்துறையில் இதுவரை வந்த எந்தப் பிரச்னைக்காவது போராட்டம் செய்திருக்கிறீர்களா? நீங்கள் ஏன் அதை செய்யவில்லை. பெரிய நடிகர்தானே நீங்கள். பக்கத்து மாநில திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்புக்காக அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது போல் நீங்கள் அந்த முயற்சியை முன்னெடுத்திருக்கலாமேம். வாரிசு அரசியல் என்று சொல்கிறீர்கள். நீங்களே ஒரு வாரிசுதானே. உங்கள் அப்பா, அம்மா, மாமா என அனைவரும் சினிமாவை சேர்ந்தவர்கள்தானே. வாரிசு என்று நீங்கள் பேசலாமா? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்கிறீர்கள். இதெல்லாம் ரொம்ப தவறு ஜோசப் விஜய். விஜய் நல்ல நடிகர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள்கூட விஜய் ரசிகர்கள்தான். அனைவருமே விஜய் ரசிகர்கள்தான். நானேகூட விஜய் ரசிகர்தான். அதை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். இந்த மேடையில் வைத்துக்கொண்டே உங்களை பாராட்டுகிறேன்; ஜோசப் விஜய் நீங்கள் திறமையான நடிகர்தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியலில் நீங்கள் ஜீரோ. அதை எப்போதும் உங்கள் மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். போஸ் வெங்கட்டின் இந்த கருத்துக்கு தவெகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது திமுக – தவெக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வெளியானது ஜனநாயகன் படத்தின் கதை.. மிரட்டும் வசனங்களை கொடுத்திருக்கும் ஹெச்.வினோத்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share