Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!
'டிராகன்' பட ரிலீசுக்கு பின்னர் சென்சேஷனல் ஹீரோயினா மாறி இருக்கும் கயாடு லோஹர் No மேக்கப் லுக் போட்டோஸ் இப்போ வைரலாகி வருது.
ஒவ்வொரு வருடமும், தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகம் ஆனாலும், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடிக்கிறார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு ரிலீஸ் ஆன, டிராகன் படம் மூலமாக தமிழுக்கு வந்துள்ளவர் தான் கயாடு லோஹர்.
இதையும் படிங்க: உச்சபட்ச கிளாமரில் கயாடு லோஹர்..! மனதை பறிகொடுக்கும் இளசுகள்..!
அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், கயாடு லோஹர் பல்லவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிரதீப் ரங்கநாதனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணாக இவர் நடித்திருந்த நிலையில், பின்னர் திருமணம் நின்றுவிடும். 30 நிமிடம் மட்டுமே இவரின் காட்சிகள் படத்தில் இடம்பெற்றாலும் இப்போது இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
தற்போது தமிழ் திரையுலகின் சென்சேஷனல் நாயகியாக இருக்கும் கயாடு லோஹர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கயாடு லோஹர் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல்... நோ மேக்கப் லுக்கில் நெற்றியில் சந்தனத்தோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அபிநயாவின் கணவர் பெரிய தொழிலதிபரா...! ஒருவழியாக புகைப்படத்தை பகிர்ந்த அபி..!