அதிக கடனை வாங்கியிருக்கிறார் ராம்குமார்... சிவாஜி குடும்பத்திற்குள் வெடித்த பூகம்பம்!!
ராம்குமார் அதிக கடனை வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானதால் சிவாஜி குடும்பத்திற்குள் பூகம்பம் வெடித்ததாக கூறப்படுகிறது
நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். தயாரிப்பாளரும் நடிகருமான இவருக்கு துஷ்யந்த் என்ற மகன் உள்ளார். இவர் சில படங்களில் நடித்த போதும் அவருக்கு எதுவும் கை கொடுக்கவில்லை. இதனால் நடிப்பை விட்டுவிட்டு திரைப்பட தயாரிப்பு விநியோகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். அதிலும் நஷ்டம் ஏற்படவே தனது தந்தை மற்றும் சித்தப்பாவின் சிவாஜி ப்ரொடக்சன்சில் பணிபுரிந்து வந்தார்.
பிறகு தனியாக படம் தயாரிப்பதாக கூறி துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அதில், நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்த படத்திற்கு ஜகஜால கில்லாடி என்று பெயரிடப்பட்டது.
இந்த பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதையும் படிங்க: சிவாஜி வீடு ஜப்தி விவகாரம்... மூத்த மகன் ராம்குமாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
இதையடுத்து அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான வழக்கு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அன்னை இல்லம் வீட்டிற்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது என் பெயரில் உள்ள சொத்து என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிமன்றத்தில் உரையாடிய பிரபு, எனது அண்ணன் ராம்குமார் வாங்கிய கடனை என்னால் அடைக்க முடியாது. அவர் இதுபோன்று பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். நான் இதுவரை யாரிடமும் கடன் பெறவில்லை. ரூ.150 கோடி சொத்து மதிப்புள்ள அன்னை இல்லத்தை 9 கோடி கடனுக்கான ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே ராம்குமார் அதிக கடனை வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானதால் சிவாஜி குடும்பத்திற்குள் பூகம்பம் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவாஜி வீட்டின் மீது உரிமை, பங்கு இல்லை எனவும், எதிர்காலத்திலும் எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஜப்தி உத்தரவை நீக்க கோரிய நடிகர் பிரபு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜி வீடு ஜப்தி விவகாரம்... மூத்த மகன் ராம்குமாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!