×
 

2 நாட்களாக பூட்டிய வீட்டில்... பிரபல பாடகி எடுத்த விபரீத முடிவு!!

பிரபல திரைப்பட பாடகி தற்கொலை செய்து கொள்ள முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல பின்னணி பாடகி கல்பனா தமிழில் தாஜ்மஹால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசாவின் மனசுல என பல படங்களில் பாடல்களை பாடி ரசிகர்களை ஈர்த்தவர். இவர் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 

தெலுங்கானாவின் ஐதரபாத்தில் உள்ள நிசம்பத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீடு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பகக்த்தினர் போலீசாருக்கு தகவல் கொடுதனர். உடனே அங்கு வந்த போலீசார் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர். உடனே கதவை உடைத்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்பனா மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கல்பனா மருத்துவமனைக்கு அழைத்து செல்லபப்ட்டார். அங்கு கல்பனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளனர். கல்பனாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவருக்கு சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: ரஜினி பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; அதிர்ச்சியில் திரையுலகம்! 

கல்பனாவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என தெரியாத போலீசார் அவரது கணவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. 5 வயதிலேயே தனது முதல் பாடலை பாட தொடங்கிய கல்பனா,  மதுரை டி.ஸ்ரீநிவாஸனிடம் கர்நாடக இசையை முறைப்படி கற்றுள்ளார், இசை குடும்பத்தை சேர்ந்த இவர் மலையாளத்தில் ஸ்டார் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வந்துளாளர். 

பின்னர், தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டுள்ளார். பின்னணி பாடகியான இவர் 2013ம் ஆண்டு முதல் இதுவரை 1500 பாடல்களை பாடியிருக்கிறார், அதோடு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சேர்ந்து 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார்.

இதையும் படிங்க: இனிமே அது தேவையில்ல....அஜித்தை தொடர்ந்து நயன்தாராவும் ரசிகர்களுக்கு போட்ட கண்டிஷன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share