குஷி பட நடிகர் முதல் சிம்பு பட நடிகை வரை 25 பேர் மீது வழக்கு... காரணம் இதுதானாம்!!
முன்னணி நடிகர்கள் உள்பட 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்ததற்காக FIR பதிவு செய்யப்பட்டு இருப்பது தெலங்கானாவில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.
அண்மையில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்க்க தெலுங்கானாவில் இருக்கும் திரையரங்கம் ஒன்றுருக்கு அல்லு அர்ஜூன் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் இருந்தார். நடிகர், பிரபலம், வசதி வாய்ந்தவர் என எதை பற்றியும் கவலைக்கொள்ளாமல் ரேவந்த் ரெட்டி அரசு அல்லு அர்ஜூன் மீது அதிரடி நடவடிக்கை மெற்கொண்டதை கண்டு பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். அத்தோடு நிறுத்திவிடாமல் அவர் அளித்த பேட்டியும் அப்போது பெரிதாக பேசப்பட்டது. அவர் அளித்த பேட்டியில், அல்லு அர்ஜுன் சிறைக்குச் சென்றதும் அவரது வீட்டில் பல முன்னணி நடிகர்கள் துக்கம் விசாரிப்பதை போல வரிசைக் கட்டி சென்றனர். ஆனால், உயிரிழந்த அந்த ரேவதியின் வீட்டுக்கும் மூளைச்சாவு அடைந்த அவரது மகனை பற்றி ஒரு சினிமா பிரபலமாவது கவலைப்பட்டார்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: மனசாட்சி வேண்டாமா அட்லீ.. இவ்வளவு சம்பளமா கேட்பாங்க.. பின்வாங்கிய கலாநிதி..!
இவ்வாறு ரேவந்த் ரெட்டி அரசு பாரம்பட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது முன்னணி நடிகர்கள் உள்பட 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக FIR பதிவு செய்யப்பட்டு இருப்பது தெலங்கானாவில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.
ஆன்லைன் ரம்மி ஆப்களை சில மாநிலங்களில் அரசு தடை செய்தாலும் அதன் விளம்பரங்கள் இன்றளவும் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் அதில் பணத்தை இழப்பவர்களும் அதனால் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவகளும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதுஒருபுறம் என்றால் மறுபுறம் இதுபோன்ற ஆன்லைன் பெட்டிங் ஆப்களுக்கு பிரபல நடிகர் நடிகைகள் விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது.
விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற எண்ணத்தை ஊட்டும் வகையில் சில பெரிய நடிகர்கள் பணத்துக்காக விளம்பரப்படுத்தி ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதை அடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த பனிந்த்ரா ஷர்மா என்பவர் இதுக்குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் FIR போடப்பட்டு விசாரணைக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பட்டியலில், நடிகர் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை நிதி அகர்வால், லக்ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் அனன்யா நாகெல்லா, ஸ்ரீ ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சவுந்தர்ராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவனி, நேகா பதான், பாண்டு, பத்மாவதி, இம்ரான் கான், விஷ்ணு பிரியா, ஹர்ஷா சாய், சயா சன்னி யாதவ், ஷியாமளா, டேஸ்டி தேஜா, ரிது சவுத்ரி, பந்தாரு சேஷாயணி, சுப்ரிதா உள்ளிட்ட சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் என மொத்தம் 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புஷ்பாவுடன் ஃபையராக வருகிறார் அமரன்... அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் பிரபல நடிகர்..!