×
 

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு.. செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் - சைந்தவி தம்பதியின் விவாகரத்து வழக்கு செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர விவாகரத்து கோரிய வழக்கில், செப்டம்பர் 25ம் தேதி நேரில் ஆஜராகும்படி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி-க்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமா பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி. பிரகாஷ், கடந்த 2013ம் ஆண்டு தனது பள்ளித் தோழி,  சினிமா பின்னணிப் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷின் குடும்ப சண்டைக்கு காரணம் இவங்க தான்.. நெட்டிசன்கள் போட்ட பதிவு.. முற்றுப்புள்ளி வைத்த நடிகை..!

கடந்த 12 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் பிரிவதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த மார்ச் 24ம் தேதி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை கோப்புக்கு எடுத்துக் கொண்ட சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரிய மனுவை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இருவரும்  நேரில் ஆஜராகும் பட்சத்தில், விவாகரத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி டைவர்ஸ் விவகாரம்... கலாய்த்து தள்ளிய ப்ளூசட்டை மாறன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share