×
 

'ஐ லவ் யூ டா தம்பி...' காமுகனாக மாறிய 'லப்பர் பந்து' பட நடிகர்... பார்க்கில் நடந்த பயங்கரம்..!

கைதான ஹரி லப்பர் பந்து படத்தில் நடித்து இருப்பதும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பல பிரபலங்களோடு புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரின் பெற்றோர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பான புகார் அளித்தனர். அந்தப் புகாரில் தனது மகன் விருகம்பாக்கத்தில் உள்ள பார்க்குக்குச் சென்றபோது இளைஞர் ஒருவர் மகனிடம் பேச்சு கொடுத்ததாகவும், பின்னர் 'ஐ லவ் யூ டா... நீ அழகாய் இருக்கே' எனக்கூறி பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து பயந்து போன பெற்றோர் தனது மகன் அழுது கொண்டே நடந்ததை தெரிவித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், யார் அந்த இளைஞர் என துப்புத் துலக்க ஆரம்பித்தனர். விருகம்பாக்கம் பூங்காவில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டதில் அந்த நபர் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஹரி என்ற 21 வயது இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் உடனே ஹரியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதையும் படிங்க: விஜய்யை சீண்டும் விடாமுயற்சி...! அஜித் ரசிகர்கள் செய்த அரசியல் விமர்சனம்...! 

ஹரி பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல தொடர்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். பூங்காவிற்கு வரக்கூடிய சிறுவர்களை குறி வைத்து 'அழகாய் இருக்கிறாய்... என்னை போல நீயும் பிரபலமாவாய்..'' என கூறி, பின்னர் லவ் பண்ணுவதாக ஏமாற்றி சிறுவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதை தெரியவந்துள்ளது.

 இதேபோல தன்னுடன் நடிக்க வரும் பல துணை நடிகைகளை உல்லாசத்திற்கு அழைத்து பல பெண்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவர்களிடம் தன் இச்சையை தீர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ''சீரியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என நினைத்த நிலையில் அடக்க முடியாத ஆசையால் அசிங்கப்பட்டு நிற்பதாக'' அழுது கொண்டே ஹரி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஹரியின் செல்போன்களையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் கைதான ஹரி லப்பர் பந்து படத்தில் நடித்து இருப்பதும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பல பிரபலங்களோடு புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

பெண் குழந்தைகள் மட்டுமில்லாமல், ஆண் குழந்தைகளும் தனக்கு நடப்பவற்றை பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் தவறான பாதையில் செல்ல நேரிடும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு போட்டியாக களம் இறங்கிய சாய் பல்லவியின் தண்டேல்.. ரசிகர்களின் கவனத்தை பெறுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share