×
 

ஆஸ்கருக்கு செல்லும் இந்திய குறும்படம்.. ஏழ்மையை வைத்து வியாபாரம் செய்வதா?...

உலக திரைப்பட விருதுகளில் ஆஸ்கருக்கு என்று தனியிடம் உள்ளது.

எந்த நாட்டினராக இருந்தாலும் ஆஸ்கர் விருதினை வாங்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ளது. 

இதில் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசீலனையில் உள்ளன. வாக்குகளின் அடிப்படையில் அன்றைய தினம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படும். இதில் சிறந்த குறும்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் அனுஜா என்ற படம் இடம்பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: குடும்பஸ்தனாக மாறிய மணிகண்டன்... அட்வைஸ் தந்த ஜி.வி.பிரகாஷ்....

பிரபல இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிண்டி காலிங் ஆகியோர் இணைந்து இந்த குறும்படத்தை தயாரித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் க்ரேவ்ஸ் என்பவர் இந்த குறும்படத்தை இயக்கி உள்ளார்.

இந்திய குறும்படம் ஒன்று அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆஸ்கர் போட்டியில் பங்கேற்பது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே என்று தோன்றலாம். ஆனால் இந்த அனுஜா எத்தகைய குறும்படம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

டெல்லியின் புறநகரில் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 9 வயது சிறுமி ஒருத்தியின் கதை இ. தன்னுடைய சகோதரியுடன் வேலை பார்க்கும் அந்த சிறுமிக்கு பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்ழுது கனவு. அந்த கனவு என்ன ஆனது என்பதாக கதை செல்கிறது. 

மீண்டும், மீண்டும் இந்தியர்களின் வறுமை, அழுக்கு, மூடநம்பிக்கை, பாலியல் பிறழ்வு இவற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் மட்டும்தான் ஆஸ்கர் போன்ற உலக மேடைகளில் இடம்பிடிக்க வேண்டுமா? இங்கிருந்து ஹாலிவுட் சென்று அதன் வளமையை அனுபவிக்கும் ப்ரியங்கா சோப்ரா, மிண்டி காலிங் போன்றவர்கள் இந்தியாவின் உன்னதத்தை பறைசாற்ற படம் எடுக்கத் தெரியாதா? 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் வேலைக்கு செல்லும் 9 வயது சிறுமியின் கதை தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா? இதன்மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ப்ரியங்கா?.. 

அமெரிக்காவில் உள்ள நிறவெறி, பாலஸ்தீனத்தில், காஸாவில் அமெரிக்க துருப்புகள் நிகழ்த்திய வேட்டை ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு நீங்கள் படம் எடுத்து ஆஸ்கர் மேடையில் ஏற்ற துணிவு இருக்கிறதா? பிறரின் ஏழ்மையை மூலப்பொருளாக கொண்டு உங்கள் கருணையை விற்பனை செய்யத் துணிகிறீர்கள்.. இதுதானே அனுஜா.. இதற்கா ஆஸ்கர் கிடைக்க வேண்டும்..

இந்திய திரைப்படத்துறையினர் இதுபோன்ற படைப்புகள் சர்வதேச மேடை ஏறுவதை தடுக்க வேண்டும் என்பதே இந்தியர்களாகவும், திரைப்பட ரசிர்களாகவும் செய்யவேண்டிய காரியம் ஆகும்.

இதையும் படிங்க: வாடிவாசல் திரைப்படம் குறித்த அட்டகாச அப்டேட்....

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share