பெருசு vs ஸ்வீட்ஹார்ட்... Box Office-ல் ஜெயிச்சது யார்?
பாகஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டியது பெருசா அல்லது ஸ்வீட்ஹார்ட்டா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாரம் வாரம் புது திரைப்படங்கள் ரிலீசாகி வருகிறது. வார கடைசியில் மக்கள் விடுமுறையை கழிக்க திரைப்ப்டங்களுக்கு செல்ல ஏதுவாக இயக்குநர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சிறிய இயக்குநர்கள் முதல் பெரிய இயக்குநர்கள் வரை தங்களது படங்களை பிரமோட் செய்து வார கடைசியில் வெளியிட்டு மக்களின் கருத்துகளுக்கு காத்திருப்பது வழக்கமாகி விட்டது. ஒருபுறம் புதுபடங்கள் ரிலீசாகி வரும் நிலையில் மறுபுறம் பழைய படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதற்கும் மக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமாவில் 10 திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதில், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ரஜினி முருகன் உள்ளிட்டவை ரீ ரிலீஸ் படங்கள். மீதம் இருக்கும் 8 படங்களில் குறைந்தபட்சம் வசூலை ஈட்டிய படங்களாக ரியோ நடித்து வெளியான ஸ்வீட் ஹார்ட் மற்றும் வைபவ், சுனில் ரெட்டி நடித்து வெளியான பெருசு உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கு இடையே தான் பாக்ஸ் ஆபிஸ் போட்டி நிலவுகிறது.
இதில் ரியோவின் ஸ்வீட் ஹார்ட் படம் காதலை மையமாக கொண்டு வெளியான படம். பெருசு அடல்ட் காமெடி படம். ஆகவே ஸ்வீட் ஹார்ட்டை விட பெருசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். இரு திரைப்படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ஸ்வீட் ஹார்ட் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் நடிப்பில் நேற்று வெளியான ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் இளைஞர்களை டார்கெட் செய்து வெளியான நிலையிலும், குறிப்பிட்ட ஆடியன்ஸை அந்த படம் கவரவில்லை.
இதையும் படிங்க: ரகசியத்தை உடைத்த யுவன் சங்கர் ராஜா.. ஹார்ட் பீட்டை எகிற வைக்க வருகிறது ஸ்வீட் ஹார்ட்..!
முதல் நாளில் அதிகபட்சமாக 30 முதல் 40 லட்சம் வரை மட்டுமே இந்த படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் வைபவ் மற்றும் சுனில் ரெட்டியின் நடிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள பெருசு திரைப்படத்துக்கு காலை முதல் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்த நிலையில், மாலை மற்றும் இரவு காட்சிகள் சற்று நிரம்பின. அதன் காரணமாக அதிகபட்சமாக 60 முதல் 70 லட்சம் ரூபாயை முதல் நாளில் அந்த படம் வசூல் செய்துள்ளது. இதன் காரணமாக ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட் படத்தை வசூல் ரீதியாக முதல் நாளில் பெருசு திரைப்படம் முந்தி இருக்கிறது.
இந்த இரண்டு படங்களுமே குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்கள் என்றாலும் இந்த படங்களை தாண்டி இந்த வாரம் வருணன், டெக்ஸ்டர், ராபர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன் கொடை விழா உள்ளிட்ட படங்களும் வெளியாகி உள்ளன. ஆனால், படத்தை பார்க்க தியேட்டர்களில் தான் ரசிகர்கள் கூட்டம் வராமல் காத்து வாங்குகிறது. இதனிடையே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் பெரிதாக வசூல் செய்யவில்லை. ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான பெருசு திரைப்படம் போட்ட காசை எடுத்து விடுவார்கள் என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: தாமதமாகும் சூர்யாவின் வாடிவாசல்... காரணம் இதுதானாம்!!