நடிகைகளின் தொப்புளை கிள்ளாமல் விட்டது என் தவறு… மாமியாரை பக்கத்தில் வைத்துக் கொண்டு சிணுங்கிய சித்தார்த்..!
என்னைச் சுற்றியுள்ள அனைவரும் ஒரு ஆக்ரோஷமான, மூர்க்கமான, ஆடம்பரமான ஹீரோவாக இருக்க முயற்சிக்கிறார்கள். ஆணுக்கு வலிக்காது என்று எல்லாரும் பேசினாலும் திரையில் அழுது மகிழ்ந்தேன்
நடிகைகளை அறைவது. தொப்புளை கிள்ளுவது போன்ற கேரக்டர்களில் நடித்திருந்தால் நான் பெரிய நட்சத்திரமாக இருந்திருப்பேன்'' எனக் கூறி ஸ்டார் ஹீரோக்களை குத்திக் காட்டியுள்ளார் நடிகர் சித்தார்த்.
பாய்ஸ் புகழ் சித்தார்த் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். செப்டம்பர் 2024ல் அதிதி ராவ் ஹைடாரியை திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது தென்னிந்தியா சூப்பர்ஸ்டார்களைப் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஹைதராபாத்தில் இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தனது மாமியார், அதாவது நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் தாயார் வித்யா ராவுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் விழாவில் திரைப்படங்கள், புத்தகங்கள் மீதான தனது காதலைப் பற்றி பேசும்போது,''திரையில் நடிகைகளை அறைவது, அவர்களின் தொப்புளைக் கிள்ளுவது போன்ற காட்சிகளில் நான் நடிக்க மறுத்ததால் தமிழ்-தெலுங்கு சினிமாவில் பெரிய ஸ்டார் அந்தஸ்தை அடைய முடியவில்லை.
சில படங்களில் நடிக்க சம்மதித்திருந்தந்தால் இன்று 'பெரிய ஸ்டாரக' இருந்திருப்பேன். பெண்களை அறைவது, ஐட்டம் பாடல்களுக்கு ஆடுவது, நடிகைகளின் ஒருவரின் தொப்புளை கிள்ளுவது, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என கூறுவது போன்ற ஸ்கிரிப்ட்கள் எனக்கு கிடைத்தன. அந்தப் படங்களின் ஸ்கிரிப்ட் நன்றாக இருந்திருந்தால், பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கும். ஆனால் நான் அப்படிப்பட்ட ஸ்கிரிப்டுகளை நிராகரித்தேன். நான் வித்தியாசமாக யோசித்திருந்தால், ஒருவேளை நான் இன்று பெரிய ஸ்டாராக இருந்திருப்பேன்.
இதையும் படிங்க: சக்தி திருமகனமாக மாறிய விஜய் ஆண்டனி... சிவகார்த்திகேயனுக்காக பராசக்தியை விட்டுக் கொடுத்தாரா?
நான் என் விருப்பத்தை உள்ளுணர்வாக செய்தேன். இன்று, நீங்கள் படங்களில் பெண்களை மதிக்கிறீர்கள், பெற்றோருடன் நல்ல உறவை வைத்திருக்கிறீர்கள், குழந்தைகளை நன்றாக நடத்துகிறீர்கள், அழகாக இருக்கிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். 15 வருடங்களுக்கு முந்தைய எனது படங்களை இன்று அவர்களின் குழந்தைகள் கூட பார்க்கிறார்கள் என்கிறார்கள். அது பெரும் திருப்தியைத் தருகிறது. இது கோடிகளில் அளக்கக்கூடிய ஒன்றல்ல. என்னைச் சுற்றியுள்ள அனைவரும் ஒரு ஆக்ரோஷமான, மூர்க்கமான, ஆடம்பரமான ஹீரோவாக இருக்க முயற்சிக்கிறார்கள். ஆணுக்கு வலிக்காது என்று எல்லாரும் பேசினாலும் திரையில் அழுது மகிழ்ந்தேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 'மிஸ் யூ','இந்தியன் 2' போன்ற படங்களில் நடித்த சித்தார்த், 'இந்தியன் 3' 'டெஸ்ட்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். சித்தார்த்தின் முந்தைய படங்களில், 2023ல் வெளியான 'சிட்டா' மிகவும் கொண்டாடப்பட்டது. அவரது கேரியரின் தொடக்கத்தில் 'பாய்ஸ்', 'நுவ்வொஸ்தானந்தே நேனோடண்டானா', 'ரங் தே பசந்தி' போன்ற படங்கள் அவருக்குப் புகழைக் கொடுத்தன. அடுத்து கமல்ஹாசனுடன் 'இந்தியன் 3' படத்திலும், 'டெஸ்ட்' படத்திலும் நடிக்கிறார்.
இதையும் படிங்க: “புலிக்கு பிறந்தது பூனையாகுமா?” - மூன்று தங்க மெடல்களைத் தட்டித்தூக்கிய அஜித் மகன்.... உற்சாகத்தில் ரசிகர்கள்!