“புலிக்கு பிறந்தது பூனையாகுமா?” - மூன்று தங்க மெடல்களைத் தட்டித்தூக்கிய அஜித் மகன்.... உற்சாகத்தில் ரசிகர்கள்!
பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் மூன்று தங்கப் பதங்களை வென்று அசத்தியுள்ளார்.
பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் மூன்று தங்கப் பதங்களை வென்று அசத்தியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் சினிமாவைக் கடந்தும் கார் ரேஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பட ஷூட்டிங்கின் போது சின்ன பிரேக் கிடைத்தால் கூட பைக்கை எடுத்துக் கொண்டு உலகம் சுற்ற கிளம்பிவிடுவார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்தது, சர்வதேச அளவில் வைரலான செய்தியாக மாறியது. அஜித்குமார் செய்த சாதனையைக் கொண்டாடி தீர்ப்பதற்குள் அடுத்ததாக அவரது மகன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தியைக் கொடுத்துள்ளார்.
ஆம், அப்பா அஜித்தைப் போலவே ஸ்போர்ட்ஸ் பிரியரான அவரது மகன் ஆத்விக் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் புயல் வேகத்தில் ஓடி ஒன்றல்ல.. இரண்டல்ல... 3 தங்கப்பதக்கங்களை தட்டித்தூக்கியுள்ளார். தந்தை 8 அடிக்கு பாய்ந்தால்... மகன் 16 அடிக்கு பாய்ந்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த ரேஸுக்கு தயாரான அஜித்; போர்ச்சுகலில் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!
ஆத்விக் தனது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சென்னையின் எஃப்.சி. ஜூனியர் அணிக்காக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். போட்டியின் போது உசேன் போல்டைப் போல வேகமாக ஓடி வெற்றிக்கோட்டை தொடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலமாக மூன்று தங்க மெடல்களையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வரும் அஜித் ரசிகர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என பரவசத்துடன் பாராட்டி வருகின்றனர்.
18 அடி பாயும் குட்டி!
— MovieBond (@moviebondoff) January 29, 2025
அஜித் மகன் ஆத்விக்! #aadvik #ak #ajith pic.twitter.com/7IXgNqZIGx
இதையும் படிங்க: தல நரைச்சிப்போன காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? - ஏகே ரசிகர்களை பிபி ஏற்றும் சுசித்ரா!