×
 

குடிபோதையில் ஆபாச செயல்… ஜெயிலர் வில்லனுக்கு கடும் எதிர்ப்பு..! வைரலாகும் வீடியோ..!

'ஒரு திரைப்பட நடிகனாகவும், ஒரு மனிதனாகவும் என்னால் பல பிரச்சினைகளை சமாளிக்க முடியாது.

வெள்ளித்திரையில் பெரும்பாலும் வில்லனாக நடிக்கும் விநாயகன் அவர் நிஜ வாழ்க்கையிலும் ஒழுக்கங்கெட்ட வில்லனாகவே நடந்து கொள்கிறார். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் அவர் மீண்டும் ஒருமுறை வம்பில் மாட்டியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் விநாயகன். இப்போது தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகர். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இவரது நடிப்பு பிரமிக்க வைத்தது. இவர் சமீபத்தில் கொச்சியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் மது அருந்திவிட்டு அக்கம் பக்கத்தினரை துஷ்பிரயோகம் செய்தார். வெறும் லுங்கி அணிந்து அவர் செய்த இந்த சேட்டைகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் நடிகர் விநாயகனுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சிஐஎஸ்எஃப் அதிகாரிகளுடன் சண்டையிட்ட அவரை போலீசார் கைது செய்தனர். சிஐஎஸ்எஃப் வீரர்களை அடித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் விநாயகனுக்கு வீடு உள்ளது. ஆனால் இரவில் மது அருந்திவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் சண்டை போட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தபோது, ​​விநாயகன் காவல் நிலையம் சென்று அங்கும் தவறாக நடந்து கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் விநாயகன் மீண்டும் ஜாமீனில் வெளிவந்தார்.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பிரபல தயாரிப்பாளர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த அதிகாரிகள்; 8 இடங்களில் ஐ.டி.ரெய்டு - பகீர் பின்னணி!

https://x.com/sijo_jsp/status/1881323653918597259?

குடிப்பழக்கத்திற்கு முற்றிலும் அடிமையாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால்தான் விநாயகன் அடிக்கடி சர்ச்சைகளுக்கு ஆளாக நேரிடுகிறது என்கின்றனர் திரைத்துறையினர். நல்ல நடிகராக இருந்தாலும் நடத்தையும் முக்கியம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ள விநாயகன், ''ஒரு திரைப்பட நடிகனாகவும், ஒரு மனிதனாகவும் என்னால் பல பிரச்சினைகளை சமாளிக்க முடியாது. என் தரப்பில் இருந்து அனைத்து கெட்ட செயலுக்கும் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விவாதங்கள் தொடரட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டன்னிங் உடையில்... இடையழகை காட்டி மயக்கும் மடோனா செபஸ்டியன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share