×
 

கடத்தப்பட்ட மகேஷ்.. கார்த்திக் மீது பழி போடும் ரேவதி!கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்ப்போம்.

இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி ராஜராஜனிடம் ட்ரைவர் தான் மாப்பிள்ளை என சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ரேவதி மணமேடை ஏற மாப்பிள்ளையை அழைத்து வர சொல்கின்றனர். மாயா மகேஷை கூப்பிட போக அவன் காணாமல் போன விஷயம் தெரிய வருகிறது. 

மறுபக்கம் ராஜராஜன் அம்மா பரமேஸ்வரியிடம் நான் சாமுண்டீஸ்வரி கிட்ட சொல்லி பார்த்தேன். அவ கேட்குற மாதிரி தெரியல என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து மகேஷ் காணவில்லை என்ற விஷயம் தெரிய ரேவதி, சந்திரகலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். 

இதையும் படிங்க: சாமுண்டீஸ்வரி சொன்ன வாரத்தை.. ஏமாற்றத்தில் பரமேஸ்வரி பாட்டி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!

ரேவதி மகேஷ் காணாமல் போக ட்ரைவர் தான் காரணம் என்று சொல்கிறாள். ஆனால் சாமுண்டீஸ்வரி அதுக்கு வாய்ப்பு இல்ல.. இதுக்கு வேறொருத்தர் தான் காரணம் என சிவனாண்டியை பிடித்து கேள்வி கேட்கிறாள். ஆனால் அவன் எனக்கு எதுவும் தெரியாது என சொல்கிறான். 

அடுத்ததாக மகேஷ் குடோனில் அடைத்து வைக்கப்பட்டு இருக்க ரவுடிகள் சாமுண்டேஸ்வரிக்கு போன் செய்து மேடம் நீங்க சொன்ன மாதிரியே அவனை கடத்திட்டோம் என்று சொல்கின்றனர். 

இங்கே மாயா மகேஷை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கலாம் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதையும் படிங்க: தெரியவந்த உண்மை; கடும் கோபத்தில் ரேவதி, காத்திருக்கும் ட்விஸ்ட் என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share