×
 

கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் பிரபல நடிகர்...! கணவர் அரசியலில் 'பிஸி' மனைவி சினிமாவில் 'பிஸி'..!

தனது அடுத்த படத்தின் நடிகரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

முன்னாள் நடிகரும் தற்போதைய துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 2018ஆம் ஆண்டு  ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ராமசரவணன் தயாரிப்பில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தில் நடித்து வந்ததாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்படத்தை விட்டு 'மாமன்னன்' படத்தில் நடித்து விட்டு இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்றும் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறி சினிமா துறையில் இருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் மீதம் உள்ள 20 சதவீத காட்சிகளில் அவர் நடித்து கொடுக்கவும் தனக்கு ரூ.25 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதற்கு பதிலளிக்கும்படி உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டு உள்ளனர். இப்படி பட்ட சூழலிலும், கிருத்திகா உதயநிதி தனது படத்தின் அப்டேட்டுகளை கொடுப்பது அவரது தொழில் முனைப்பையும் கேரியரில் அவரின் ஆர்வத்தையும் காட்டுகிறது. குடும்பம் வேறு தொழில் வேறு என்ற கோட்பாட்டை கொண்ட இவர், வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், விஜய் ஆண்டனியின் 'காளி', பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் என அனைத்திற்கும் இயக்குநராக இருந்தவர்.

இதையும் படிங்க: "மதராஸி நஹீ மதுர வாசி"..மெர்சல் டு மதராஸி.. முருகதாஸ் கொடுத்த ட்வீஸ்ட்..!

இந்த நிலையில், சமீபத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், யோகிபாபு, லால், வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் "காதலிக்க நேரமில்லை". இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து உள்ள கிருத்திகா உதயநிதி, தனது அடுத்த படத்திற்கு பிரபல நடிகரான மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை கமிட் செய்து உள்ளார்.

இப்படத்தின் கதைகள் விஜய்சேதுபதிக்கு பிடிக்கவே, அவர் இதில் நடிக்க ஒப்பு கொண்டு உள்ளதாகவும் படத்தின் அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறியிருக்கிறார் கிருத்திகா. என்ன தான் அரசியல் போர்வை போர்த்திய குடும்பத்தில் இருந்தாலும் அரசியல் சாயல் இல்லாமல் தன் திறமையால் தனது பெயரை நிலை நாட்டி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் மேகா ஷெட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share