Avantika: ஹீரோயின் மெட்டீரியலாக மாறி... அழகில் அம்மா குஷ்புவை பீட் பண்ணும் மகள் அவந்திகா!
குஷ்புவின் மகள் அவந்திகா சுந்தர் தற்போது அழகில் அம்மாவையே மிஞ்சும் விதமாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..
தமிழ் சினிமாவில் 80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், தொடங்கி... சிரஞ்சீவி, வெங்கடேஷ், மம்மூட்டி, மோகன் லால் என பல தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.
இதையும் படிங்க: 25 வருடம்.. காதல் டூ கல்யாணம் முதல் இப்போது வரை! வைரலாகும் விஜயலட்சுமி போட்டோஸ்!
அதே போல் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எனவே அங்கும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
ஹீரோயினாக இருந்த போது சில காதல் தோல்விகளை சந்தித்த குஷ்பு... தனக்கு ஆறுதலாக இருந்த இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் குஷ்புவுக்கு அவந்திகா மற்றும் அனந்திட்டா என இரு மகள்கள் உள்ளனர்.
குஷ்பு - சுந்தர் சி-யின் இரு மகள்களுமே தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக அவந்திகா இந்த ஆண்டு தமிழ் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவந்திகா அதற்கான பணியில் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார். உடல் எடையை குறைத்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள இவர் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவந்திகா, அம்மா குஷ்புவையே அழகில் பீட் பண்ணும் விதமாக, எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்காக பிரியங்கா மோகன்! மின்னல் வெட்டும் அழகில் கியூட் போட்டோஸ்!