×
 

புகைச்சலை கிளப்பிய இளையராஜா - லிடியன் விவகாரம்… ஃபுல் ஸ்டாப் வைத்த சிஷ்யன்!!

சிம்பொனி இசைக்கு இளையராஜாவுக்கு அவரது மாணவர் உதவி செய்ததாக செய்தி பரவிய நிலையில் அதற்கு லிடியன் நாதஸ்வரம் விளக்கம் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்திருக்கிறார். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இந்திய நேரப்படி 12.30 மணிக்கு இந்த சிம்பொனி தொடங்கியது. வேலியன்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். இந்த இசை நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசை குழுக்களில் ஒன்றான ராயல்பிலார்மாலிக் ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞர்கள் தான் இசையமைத்தனர். இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இதன் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார். எந்த பக்கம் திரும்பினாலும் இசைஞானி இளையராஜா செய்த சாதனைகள் குறித்தும் பேசி வருகின்றனர். இதனிடையே, இளையராஜாவின் மாணவராக இருக்கும் லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி இசைக்கு உதவி செய்ததாக செய்தி பரவியது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படிங்க: முதல் சிம்பொனி அரங்கேற்றம்... இசைஞானி இளையராஜா இமாலய சாதனை!!

அதில், லிடியன் என்னுடைய சிஷ்யன். அவர் சிம்பொனி அமைத்துள்ளதாக என்னிடம் கொண்டு வந்து போட்டுக் காட்டினார். கொஞ்ச நேரம் கேட்ட நான் அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, இது சிம்பொனி இல்லை, சினிமாவின் பின்னணி இசை போல உள்ளது. சிம்பொனி என்றால் என்னவென முதலில் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் சிம்பொனி உருவாக்கு எனக் கூறினேன். அவரை நான் வழிப்படுத்தி உள்ளேன் என தெரிவித்திருந்தார். முன்னதாக இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி வெளியிட இளையராஜா தன்னை ஊக்குவித்ததாகவும், அவரது ஆசியுடன் நானும் சிமபொனி வெளியிட இருப்பதாகவும் சமூகவலைதளத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து லிடியன் நாதஸ்வரமும் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், இளையராஜா அங்கிள் எனக்கு குரு. அவர் சொன்னது தான் உண்மை. சிம்பொனி பற்றி பேசும்போது, நீயும் கற்றுக்கொண்டு முறையாக சிம்பொனி இசையமைத்து நிறைய விருதுகளை வாங்கு, பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்துவிடு என என்னிடம் கூறினார். இளையராஜா ரொம்ப ரொம்ப ஹானஸ்ட், அவர் எப்போதும் மனதில் ஒன்று வைத்து பேசமாட்டார். வெளியில் பார்ப்பவர்களுக்கு கோபமாய் பேசுவது போன்று தான் தெரியும். ஆனால், அவர் உண்மையில் அப்படி இல்லை என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லண்டன் புறப்பட்டார் இளையராஜா.. Incredible India மாதிரி நான் Incredible Ilayaraja என பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share