×
 

"காதலனை திருமணம் செய்து, திருப்பதியில் "செட்டில்" ஆக வேண்டும்" : நடிகை ஜான்வி கபூர் விருப்பம்; "3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஆசை" என்கிறார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜான்வி கபூர் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளின் போதும், தாயார் ஸ்ரீதேவியின் பிறந்த நாளின் போதும் திருப்பதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். ஏற்கனவே படமாக்கப்பட்ட கோமல் நஹ்தாவின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இது.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஜான்வி கபூர்,  "தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே குடும்பம் நடத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம்" என்று கூறினார். 

இதையும் படிங்க: ஆஸ்கருக்கு செல்லும் இந்திய குறும்படம்.. ஏழ்மையை வைத்து வியாபாரம் செய்வதா?...

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர் "தனக்கு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆசை இருக்கிறது. வாழை இலையில் சாப்பிட்டு, "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி முழக்கத்தை கேட்டபடி, மணிரத்தினத்தின் இசையை ரசித்தபடி எளிமையான வாழ்க்கையை இங்கு வாழ வேண்டும் என்பது எனது கனவு"என்று கூறியிருக்கிறார்.

"லுங்கி அணிந்த தனது கணவருக்கு பாரம்பரிய ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்" என்பதும், தனது விருப்பம் என்றும் அவர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கரண் ஜோகர், "லுங்கி அணிந்த ஒருவருடன் வாழை இலையில் சாப்பிடுவது அப்படி என்ன காதல்?' என்று ஜான்வி இடம் கிண்டலாக கேட்டார்.

திருமணத்திற்கு முன்பாக சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனது தாயார் ஸ்ரீதேவியின் இல்லத்தில் மெஹந்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் இந்த நிகழ்ச்சியின் போது அவர் தெரிவித்தார். 

தனது காதலருடன் சமீபகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஒன்றாக கலந்து கொண்டு வருகிறார். அவர்களின் இந்த காதல் ஜோடிக்கு 'ஜாஸ்ஸி' என்ற கப்பலின் பெயரை ரசிகர் ஒருவர் பரிந்துரைத்த போது அதை உடனடியாக ஜான்வி கபூர் நிராகரித்து விட்டார். அதற்குப் பதிலாக ஜான்வர் என்ற 'ஹேஸ்டேக்'கை அவர் முன்மொழிந்தார்.

இதையும் படிங்க: தாவணியை சரிய விட்டு... கவர்ச்சியில் பிராக்கெட் போடும் லாஸ்லியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share