×
 

எங்க சாதனைய பார்த்து சாட்டையால அடிச்சுகிட்டாங்க... அண்ணாமலையை சீண்டிய செந்தில் பாலாஜி!!

திமுக ஆட்சியில் 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்று வந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், விற்பனை மையங்களில் சோதனைகள் நடைபெற்றன. மொத்தமாக 7 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்தது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே நடைபெற்ற சோதனைகளில் ஏராளமான ஆவணங்களும், பெருமளவு ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.  இந்த நிலையில் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அக்யூஸ்ட் நம்பர் ஒன் ஸ்டாலின்… திமுகவிற்கு கொள்ளி வைக்கும் டாஸ்மாக் ஊழல்... அண்ணாமலை அதிரடி..!

சோதனையில் ரூ.1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கண்டனங்கள் எழுந்துள்ளது. பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. இதனிடயே இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய வானதி சீனிவாசன், ஒரே துறையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றார். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தேர்தலுக்கு முன்பாக குழப்பத்தை ஏற்படுத்த பூதக் கண்ணாடி போட்டு சில எதாவது கிடைக்குமா என தேடுகின்றார்கள். திமுகவின் சாதனைகளை பார்த்துவிட்டு சாட்டையால் கூட அடித்து கொண்டனர். தமிழக அரசை குறை கூற அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

எந்த FIR-ன் அடிப்படையில் இந்த மாதிரியான சோதனைகளை நடத்துகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சரியாக வரவில்லை. எங்களுடைய திமுக அரசு 2021 தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என வாக்குறுதி இல்லை. அப்படி இருந்தும் கூட ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை மூடி வருகிறோம். கிட்டத்தட்ட 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என தெரிவித்தார். 

இதையும் படிங்க: இது மக்கள் ஆட்சியா? மாஃபியா ஆட்சியா? வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாஜக தலைவர்கள்.. அண்ணாமலை, ஹெச்.ராஜா கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share