×
 

அனிருத்துக்கு கலாநிதி மாறன்.... "தமன்"க்கு பாலய்யா...!!! இசையமைப்பாளர்களுக்கு கிடைக்கும் கார் பரிசு மழை..!

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘டாக்கு மகாராஜ்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இசையமைப்பாளர் தமனுக்கு போர்ஷே கேயென் ரக (Porsche Cayenne) காரைப் பரிசாக வழங்கியுள்ளார்.

தமிழகம் மட்டும் அல்லாது பிற மொழிகளிலும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார்  ரஜினியின் நடிப்பில் உருவான "ஜெயிலர்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அதற்கு காரணம் கதை மற்றும் கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது அனிரூத்தின் இசையே. இருப்பினும் படத்தின் மாபெரும் வெற்றிக்காக, சன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில், அதன் நிறுவனர் கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கும், படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிரூத்க்கும்  போர்ஷே கேயென் ரக (Porsche cayenne) காரை பரிசாக அளித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு BMW X7 காரையும் பரிசாக அளித்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மேலும் வலுவை சேர்த்தது. 

இதேபோல், இயக்குனர் பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘டாக்கு மகாராஜ்’ திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பப்லு பிரிந்தாலும் கடவுள் கொடுத்த வரம் சுமேஷ்..! லிவிங் To திருமணம்..! அசத்தும் ஷீத்தல்

இப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தமனின் பங்கும் பெரியது என்பதால், அவருக்கு ஆச்சர்யம் ஊட்டும் வகையில், போர்ஷே கேயென் ரக (Porsche Cayenne) காரைப் பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா.

கடைசியாக வெளியான நடிகர் பாலகிருஷ்ணாவின் நான்கு படங்களுக்கும் "தமன்" தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமல்லாது, தற்போது உள்ள சூழ்நிலையில் படத்தின் கதையை ரசிக்கும் கூட்டம் ஒருபக்கம் இருப்பினும், அதில் வரும் இசைக்காகவே வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருகி வருவதால் பல படங்கள் வெற்றி படமாக இருக்க போகிறது. எனவே இன்னும் எத்தனை கார்கள் பரிசு மழையாக வரப்போகிறதோ என கவனமாக உற்றுநோக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் படிங்க: உனக்கு வெட்கமே இல்லையா..? ராஷ்மிகாவின் சந்தர்ப்பவாதம்… கொதிக்கும் கன்னடர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share