×
 

நயன்தாராவிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு.. நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கு தெரியுமா..?

நயன்தாராவிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் மாதம் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், திருமண ஆவணப் படத்தை வெளியிட கூடாது எனவும் நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்க: அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தான்.. விஷயம் அறிந்து சண்டைக்கு போன நயன்.. உண்மையை உடைத்த செய்யாறு பாலு!

இந்த மனுக்கள் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது.. ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார்.. குஷ்பூ காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share