அதிமுகவில் மீண்டும் OPS, சசிகலா? எடப்பாடியின் அடுத்த நகர்வு!
ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை கட்சி யில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்பட கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் மாநாடு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஓபிஎஸ் மற்றும் சசிகலா அதிமுகவில் இணைவது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீங்களாக கண்ணு, மூக்கு, காது வைத்து பேசுவதாகவும், தினந்தோறும் அதிமுகவை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பதாகவும் தெரிவித்தார்.
நீங்களாக எழுதிக் கொள்கிறீர்கள் நீங்களாகவே கற்பனை செய்து கொள்கிறீர்கள் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரை கட்சியின் சேர்க்கும் திட்டம் 100% இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: வன்முறையின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறப்போகுது.. எச்சரித்த ஓபிஎஸ்..!
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுள்ளது என்றும் தமிழகத்தில் ஊழல் மலிந்து உள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது எனவும் குற்றம் சாட்டினார். தற்போதைய பட்ஜெட் என்பது தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக தான் என்று விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆண்டு திமுக அறிவித்துள்ள எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என கூறினார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருப்பதால், அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது எனவும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் மறைக்கவே பிற மாநில தலைவர்களை அடைத்து தொகுதி மறு சீரமைப்பு குறித்து பேசி உள்ளதாக கூறினார்.
தொகுதி மறு சீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசு இருக்க வேண்டும், பாராளுமன்றத்தில் திமுக நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை திசை திருப்புவதற்காகவே கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்படுவதாக கூறினார்.
ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் ஒரு துரோகி என்றும் ஜெ. - ஜா. அணிகள் இணைப்பின்போது எப்படி ஜானகி பெருந்தன்மையாக வெளியேறினாரோ, அதுபோல சசிகலாவும் வெளியேற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே பேசி இருந்தார். ஓபிஎஸ் மற்றும் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய போவதில்லை என்ற கருத்தை அடிக்கடி எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில் மீண்டும் அதனை உறுதி செய்யும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸிடம் ஓவர் நெருக்கம் காட்டும் எடப்பாடி டீம்... அந்த நாளுக்காக காத்திருக்கும் பாஜக...!