சார்பட்டா பரம்பரை 2 படத்தில் சிக்கல்... செய்வதறியாது நிற்கும் பா. ரஞ்சித்!!
சர்பட்டா பரம்பரை 2 படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கலால் பா.ரஞ்சித் செய்வதறியாது உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய படங்கள் எப்பொழுதும் திரையுலகில் பேசுபொருளாக மாறும். அவர் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் அதனை படமாக்கும் விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். ஒருபுறம் இவருக்கென ரசிகர்கள் இருந்தாலும் மறுபுறம் இவர் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இவர் தனது படங்கள் மூலம் பேசும் அரசியல் பலருக்கு சாட்டையடியாக இருக்கும். சொல்ல வந்த கருத்தை மிக தெளிவாக நருக்கென்று சொல்வதில் இவர் திறமைமிக்கவர்.
ஆனால் இவரது படங்கள் மற்ற படங்களை போல அனைத்து தரப்பினரையும் பெரிதாக கவராததால் திரையரங்குகள் இவரது படங்களுக்கு நிரம்புவது என்பது கொஞ்சம் சந்தேகம் என்றே சொல்லலாம். இவ்வாறாக இவர் எடுக்கும் படங்களுக்கு இவர் சந்திக்கும் விமர்சனங்களும் சவால்களும் அதிகம் என்றே கூறலாம். அந்த வகையில் அவர் தற்போது சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கும் சிக்கலான ஒரு சூல்நிலையில் மாட்டிகொண்டுள்ளார். இவர் தற்போது கெத்து தினேஷ், ஆர்யா, கலையரசன் உள்ளிட்டோரை வைத்து வேட்டுவம் என்னும் படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: தியேட்டர்களில் மீண்டும் ஆர்யா-சந்தானம் காம்போ... ரீரிலீசாகிறது 'பாஸ் என்கின்ற பாஸ்கரன்'..!
இதை தொடர்ந்து அவர் சர்பட்டா பரம்பரை 2 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கொரோனா காலகட்டத்தில் வெளியானது. இது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் குறித்து பா. ரஞ்சித் கூறுகையில், சார்பட்டா படத்தை என்னால் டிவியில் பார்க்க முடியவில்லை. காரணம் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய எடுத்தோம். இந்த படம் உண்மையாக நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இருந்தாலும் இந்த படம் ரஞ்சித்துக்கு வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஏற்கனவே அறிவிப்புகள் வெளியான நிலையில் படத்தை ஆர்யா தயாரிப்பதாக கூறப்பட்டது. பின்னர் படத்தின் முக்கிய தயாரிப்பாளராக ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஆர்யா என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன.
80 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம், தற்போது அதில் இருந்து விலகி உள்ளது என கூறப்படுகிறது. இவர்கள் இதற்கு முன் தயாரித்து வெளியான தங்கலான் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்த்த வசூலை தராததால் இவர்களுக்கு அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தற்சமயம் அவர்களால் இந்த படத்தில் பணியாற்ற முடியாது என்றும் தங்கலான் வணிக ரீதியாக பெருமளவிற்கு வெற்றியை பெறாததும் தான் தாங்கள் விலக காரணம் என்று கூறுகின்றனர். இதனால் தற்போது ரஞ்சித் செய்வதறியாது உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா... இலங்கையில் விறுவிறு படப்பிடிப்பு!!