குற்ற உணர்ச்சியோட என்னால நடிக்க முடியல… பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா விலகல்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா சீரியலை விட்டு விலக நினைத்தேன் என்று கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விஜய் டிவியில் ஏரளாமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் ஒரு சில சீரியல்கள் மெகா ஹிட்டாகிவிடுகிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மளிகைகடை, கூட்டுகுடும்பம், அண்ணன் தம்பி பாசம் என ஒரு சாராசரி குடும்பத்தை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த சீரியல் மக்கள் மனதில் இடம்பிடித்தது. இந்த சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடு ஒளிபரப்பானது. அதன் முதல் பாகம் வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் மீனா என்ற ரோலில் நடிகை ஹேமா நடித்து வருகிறார். முதல் பாகத்தில் இதே பெயர் கொண்ட ரோலில் தான் அவர் நடித்திருந்தார். இவர் சீரியலில் கதைபடி கர்ப்பமான அதே வேளையில் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமானார். அதனால் கர்ப்பமாக இருக்கும் பொழுதும் அவர் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரைக்கும் சூட்டிங்கில் கலந்து கொண்ட ஹேமா குழந்தை பிறந்து ஒன்றரை மாதத்தில் மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் தற்போது அவர் சீரியலை விட்டு விலக நினைத்தேன் என்று கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: வெள்ளித்திரையில் "சிறகடிக்க ஆசை"... நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் ஆஃபர்...!
அவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக நினைத்தேன். முதல் பாகத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது கர்ப்பமாக இருந்த நிலையில் டெலிவரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரைக்கும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் குழந்தை பிறந்த பிறகு நான் நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன். ஏனென்றால் நான் நடிக்கப் போய்விட்டால் என்னுடைய மகன் என்னை மறந்து விடுவான் என்று நான் நினைத்தேன். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் அதெல்லாம் உன்னை மறக்க மாட்டான். நாங்கள் இருக்கிறோம் உனக்கும் உன் மகனுக்கும். அதனால் உன் மகனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ தைரியமாக போயிட்டு வா என்று சொன்னாங்க.
ஆனாலும் சூட்டிங் நடிச்சுட்டு குழந்தையை தூக்கி பால் கொடுக்கும் போது எனக்கு அவ்வளவு குற்ற உணர்ச்சியாய் இருக்கும். என் பையனை சரியா என்னால பாத்துக்க முடியல, அவனை நல்லபடியா என்னால் வளர்க்க முடியலையே என்று வருத்தமா இருக்கும். அந்த நேரத்தில் எனக்கு சீரியலில் நடிச்சவங்களும் நல்ல சப்போர்ட் செய்தார்கள். குடும்பத்தினரும் சப்போர்ட் செய்தாங்க. அதனால் தான் என்னால் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடிந்தது. ஒன்றரை மாதம் கழித்து நான் சீரியலில் நடிக்க வந்தேன் அப்போ கூட எதுவும் சொல்லாமல் என்னுடைய காட்சிகளை எளிமையாக வைத்திருந்தார்கள். அதனால் தான் என்னால் தொடர்ந்து அந்த சீரியலில் நடிக்க முடிந்தது. அதுபோல இரண்டாவது பாகம் நீங்களும் நடிக்கணும் என்று சொன்னதும் என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: கட்டும் சேலை மடிப்பில் கவர வைத்த பவித்ரா ஜனனி... இந்த சிரிப்புக்கு விலையே இல்லை.. பாராட்டும் ரசிகர்கள்..!