தரையில் உட்கார்ந்து படம் பார்த்த இயக்குநர்.. வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்!!
குட் பேட் அக்லி திரைப்படத்தின் இயக்குநர் தரையில் அமர்ந்து படம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு, அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். மேலும் இதில் பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தின் முதல் பாதியில் படம் கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும், இரண்டாம் பாதியில் படம் மொத்தமும் அஜித் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே, அதாவது கடந்த 10 ஆண்டுகளாக மாஸான படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். அதிலும் இவர் கடைசியாக கேங்ஸ்டராக நடித்த படம் பில்லா 2. இந்த படத்திற்கு பின்னர் வெளியான படங்களில் சிலவற்றில் ரவுடியாக இருந்து, திருந்தி வாழும் கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பார். ஆனால் குட் பேட் அக்லி படத்தில் முழுக்க முழுக்க கேங்ஸ்டராக நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். படத்தை முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தரையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: படம் வெறித்தனமா இருக்கு.. முதல் ரிவியூவில் பாசிட்டிவ் கமெண்ட் வாங்கிய "குட் பேட் அக்லி"...!
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என பலமுறை கூறியுள்ளார். மேலும் அஜித் படங்களுக்கு போஸ்டர் ஒட்டி உள்ளதாகவும், கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து, அஜித்தைப் பார்த்து பார்த்து வளர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் குட் பேட் அக்லி படத்தை முழுக்க முழுக்க ஃபேன் பாய் சம்பவமாக தான் எடுத்துள்ளேன் என தெரிவித்தார். படத்தில் ஓ.ஜி. சம்பவம் என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார். மேலும் படத்தின் டீசர் ரிலீஸின்போது தியேட்டருக்கு வந்து தல தரிசனம் செய்தார்.
டீசர் டிரைலர் என இரண்டிலும் மிரட்டி விட்டதால், ரசிகர்களுக்கு ஆதிக் மீது தனி மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. ஆதிக் படம் பார்க்க சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்திருந்தார். படம் பார்க்க வந்த அவர், தரையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். ஆதிக் தரையில் அமர்ந்து படம் பார்த்ததைப் பார்த்த ரசிகர் ஒருவர் அதனை தனது மொபைலில் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் தரையில் அமர்ந்து ஆதிக் படம் பார்த்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரபல தொலைக்காட்சியின் வசமானது அஜித்தின் "குட் பேட் அக்லி"...! முன்பதிவில் ஹவுஸ் புல் லிஸ்டில் நம்பர் ஒன்..!