×
 

பிரபல தொலைக்காட்சியின் வசமானது அஜித்தின் "குட் பேட் அக்லி"...! முன்பதிவில் ஹவுஸ் புல் லிஸ்டில் நம்பர் ஒன்..!

ரசிகர்களின் பேராதராவால் முன்பதிவில் ஹவுஸ் புல் ஆனதுடன் குட் பேட் அக்லி படத்தையும் பேரம் பேசி வாங்கியுள்ளது தொலைக்காட்சி நிறுவனம்.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கை கொஞ்சம் உடைந்து போனாலும் அடுத்த படத்தில் கண்டிப்பாக ரசிகர்களின் பேராதரவையும் அன்பையும் பெற முடியும் என நிரூபித்து உள்ளது அஜித்தின் "குட் பேட் அக்லி ". மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு முதலானோர் நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி".

அதுமட்டுமல்லாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், விடாமுயற்சியை விட இப்படம் மிகவும் அருமையாகவும் மாசாகவும் இருக்கும் என படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், இப்படம் நாளை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முன்பதிவானது ஏப்ரல் 4ம் தேதி இரவு "08.02" மணிக்கு தொடங்கியது. அதன்படி, இதுவரை குட் பேட் அக்லி, ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றதுடன், சுமார் 1800 காட்சிகள் முன்பதிவிலேயே "ஹவுஸ் புல்" ஆகியுள்ளது. இதுவே இந்த படத்தின் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: புதிய சிக்கலில் அஜித்தின் "குட் பேட் அக்லி"..! முதல் காட்சி கிடையாது.. படக்குழுவினர் அந்தர்பல்டி..!

இதனை தொடர்ந்து, இப்படத்தின் முதல் காட்சி மதுரையில் திரையிடப்படாது என்ற தகவல் நேற்று வெளியாகி ரசிகர்களை வேதனை அடைய செய்தது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ.1900த்திற்கும், தனி திரையரங்குகளில் முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ.500க்கும் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்க பட்டுள்ளதாம்.

குறிப்பாக, ரூ.500க்கு டிக்கெட்களை விற்கவில்லை என்றால் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் முதல் காட்சி இல்லை, 12 மணிக்கு தான் காட்சியை தொடங்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் செக் வைத்து இருக்கின்றனர். 

இப்படி இருக்க, தற்பொழுது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை நெட்பிளிக்ஸ், அமேசான் ஃபிரைம், டென்ட் கொட்டா, ஜீ5 போன்ற முக்கிய ஓடிடி தளங்கள் அனைத்தும் வாங்க போராடி வந்த நிலையில், சிங்கிளாக வந்து படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான "சன் டிவி". பல கோடி ரூபாய் செலவு செய்து விடாமுயற்சி படத்தை போல் இந்த படத்தையும் தன் வசமாக்கி உள்ளனர். 

இதனை பார்த்த நெட்டிசன்கள், கண்டிப்பாக இந்த வருடம் தீபாவளிக்கு "இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, புத்தம் புதிய மெகா ஹிட் திரைப்படம் "குட் பேட் அக்லி" உங்கள் சன் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள் என்ற புரோமோவை நாம் பார்ப்போம் " என பதிவிட்டு வருகின்றனர். 


 

இதையும் படிங்க: ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்த "குட் பேட் அக்லி"...! வசூல் வேட்டையிலும் சாதனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share