அட்லீயுடன் இணையும் அல்லு அர்ஜூன்… அடேங்கப்பா.. இவ்வளவு சம்பளமா..?
100-150 கோடி அல்ல, அட்லீயின் படத்திற்காக அல்லு அர்ஜுன் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார்.
'புஷ்பா 2' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் கிராஃப் உச்சத்தில் உள்ளது. அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி இமாலய சாதனை படைத்தது. புஷ்பா 2 படத்தின் வரலாற்று வெற்றி, புகழுக்குப் பிறகு, இப்போது அல்லு அர்ஜுன் பிரபல இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
புஷ்பா 2 படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறார். இதற்காக, அவர் அட்லீயுடன் கைகோர்த்துள்ளார். ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படமான 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லீ, இப்போது அல்லு அர்ஜுனை இடயக்க உள்ளார். இதற்காக அல்லு அர்ஜுன் 100-150 கோடி அல்ல, 175 கோடி சம்பளத்தில் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதையும் படிங்க: புஷ்பா பட ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பவர் அல்லு அர்ஜுன் இல்லை..! இயக்குனர் பளிச் பேச்சு..!
புஷ்பா 2 போன்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த பிறகு, அல்லு அர்ஜுனுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. அட்லீ குமார்- அல்லு இணைந்து ஒரு மெகா பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள். அல்லு இதற்காக சன் பிக்சர்ஸுடன் ரூ.175 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இது தவிர, அவர் லாபத்தில் 15 சதவீத பங்கையும் எடுத்துக் கொள்வார். அட்லீயின் படத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அல்லு அர்ஜுன் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் தொடங்கலாம். ஆனால், அல்லு மற்றும் அட்லீயின் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிந்ததும், அதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2025 வரை தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் கடைசியாக 'புஷ்பா 2' படத்தில் நடித்திருந்தார். டிசம்பர் 2024-ல் வெளியான புஷ்பா 2, உலகளவில் ரூ.1742 கோடி வசூலித்து வரலாற்று சாதனை படைத்தது. இயக்குனர் சுகுமாரின் படம் இந்தியாவில் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1471 கோடி வசூலித்தது.
இதையும் படிங்க: குஷி பட நடிகர் முதல் சிம்பு பட நடிகை வரை 25 பேர் மீது வழக்கு... காரணம் இதுதானாம்!!