புஷ்பா-னா ஃபிளவர் இல்ல.. வசூலில் கோடிகளை கடந்த ஃபயர்..!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா - 2 திரைப்படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலாகி சாதனை படைத்து உள்ளது.
கேஜிஎப் படம் என்று வந்ததோ அன்றைய தினத்திலிருந்து வருகின்ற படங்களின் கலர் டோன் முதல் கதாநாயகன் லுக் வரைக்கும் மாறியது. அந்த வரிசையில் பெரிதும் எதிர்பார்த்த படம் புஷ்பா, இப்படத்தின் ஃபிராண்டு வார்த்தை என்றால் "புஷ்பான்னா ப்பிளவருன்னு நினைச்சியா... வேர்ல்ட் ஃபயர்" இந்த வார்த்தைக்காகவே படம் ஓடியது. இப்படத்தில் செம்மரத்தை வெட்டும் புஷ்பா மரத்தை கடத்தி அரசாங்கத்தையே தன்னுடைய கையில் வைக்கும் அளவிற்கு வளர்ந்து வருவார்.
அதுமட்டுமல்ல கடத்தலில் இப்படியும் கடத்தலாம் என்பதை எப்படி சூர்யாவின் அயன் படம் போலீசுக்கு காமிக்க பட்டதோ, அதே போல் இந்த படத்திலும் மரங்களை இப்படியும் கடத்துவார்கள் என்பதை தெளிவாக காமித்து கொடுத்து இருக்கிறார் இயக்குநர். புஷ்பா முதல் பாகத்தின் வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு உண்டான வரவேற்பும், வந்தபின் நடந்த பிரச்சனைகளும் அனைவருக்கும் தெரியும். புஷ்பா பட கதாநாயகனாக அல்லு அர்ஜுனை காண வந்த ரசிகை கூட்டத்தில் இறந்து போக, கோர்ட் வரைக்கும் இழுக்கப்பட்டு பல பிரச்சனைகளையும் தாண்ட வைத்தது இந்த படம்.
இதையும் படிங்க: பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்த "புஷ்பா" ஜாலி ரெட்டிக்கு கல்யாணம்..! சிக்குன பொண்ணு யார் தெரியுமா..!
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜனவரி 17ம் தேதி வெளியாகி இன்று வரை உலகம் முழுவதும் ரூ.1,871 கோடி வசூலித்து உள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர். புஷ்பா ப்பிளவர் இல்ல ஃபயர் என்பதை நிரூபித்து உள்ளனர். தற்பொழுது இந்த படம் ஓடிடி தளங்களிலும் வெளியாக அநேக ரசிகர்களால் பார்த்து பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கவுண்டமணியை வம்பிழுக்க வடிவேலு என்ன செய்வார் தெரியுமா..! நடந்ததை உடைத்த இயக்குநர்..!