×
 

கேம் சேஞ்ஜர் குறித்து தமன் விட்ட வார்த்தை... கடுப்பாகி unfollow செய்த ராம் சரண்... என்னதான் நடந்தது?

கேம் சேஞ்சர் படம் குறித்து இசையமைப்பாளர் தமன் அளித்த பேட்டியால் நடிகர் ராம்சரண் சங்கடத்தில் ஆழ்ந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், நடிகை கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஸ்ரீகாந்த், சுனில், யாஷிகா ஆனந்த், வெண்ணிலா கிஷோர் என பலர் நடித்த படம் தான் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.  இந்த படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது.

500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் படம் காத்து வாங்கியது. எதிர்பார்த்த வசூலை படம் பெறாவில்லை. வெறும் 120 கோடியை மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிசில் இந்த படம் தோல்வி அடைந்தது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. படத்தை பார்த்தவர்கள் இயக்குநர் சங்கர் முதல்வன் படத்தை பட்டி ரிங்கரிங் செய்து இப்படத்தை எடுத்துள்ளதாக விமர்சித்தனர்.

இதையும் படிங்க: பேரு வச்சதே அஜித்தான்... வைரலாகும் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி!!

மேலும் இந்த படத்தில் ரசிக்கும் படியான பாடல்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதுக்குறித்து பேசியிருந்த இசையமைப்பாளர் தமன், ஒரு படத்தின் வரும் பாடல் இசைக்கும், இசையமைப்பாளருக்கும் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. ஒரு பாடல் ஹிட்டாவது நடன இயக்குநர்களின் கைகளிலும் இருக்கிறது. அந்தப் பாடல் திரையில் வரவேற்பை பெற வேண்டுமென்றால் நடன இயக்குநர்கள் சரியான நடன அசைவுகளை அமைக்க வேண்டும்.

ஆனால், கேம் சேஞ்சர் படத்தின் பாடல்களில் ரசிகர்களை கவரும் வகையில் நடன அசைவுகள் இல்லை. அது தான் படம் தோல்வி அடைய காரணம் என்றார். இசையமைப்பாளர் தமனின் இந்தக் கருத்து இணையத்தில் இணையத்தில் தீயாய் பரவியது. இதனால் சங்கடத்தில் ஆழ்ந்த ராம் சரண், தனது சமூக வலைத்தளத்தில் இருந்து தமனை unfollow செய்துவிட்டதாக கூறப்படுகிறது.  

இதையும் படிங்க: திரைபிரபலங்களை பீதியடைய செய்த தொழிலதிபர்..!  ஒரே புகார்.. 25 பேர் மீது வழக்கு..! விஜய்தேவர்கொண்டா, பிரகாஷ்ராஜ் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share