×
 

ICU-வில் மகன்; உச்சகட்ட பயத்தில் நான்... வைரலாகும் வனிதாவின் பேட்டி!!

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது மகன் குறித்து அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா என்னும் படத்தில் நடுத்திருக்கிறார். இவர் மொத்தம் 3 திருமணங்கள் செய்துகொண்டார். ஆனால் அந்த 3 திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்தார்.  கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார். 

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தனது தந்தையுடன் சண்டையிட்டு தற்போது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். வனிதா விஜயகுமாருக்கு மொத்தம் இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார். அதில் மகள்கள் மட்டுமே இவருடன் இருக்கின்றனர். மகன் விஜயகுமாருடன் இருக்கிறார். இதற்கிடையே வனிதா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் இருந்து வெளியே வந்த பின் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் வசந்தபாலனின் அநீதி படத்தில் இவர் நடித்தார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு படமும் ஒரு பிரச்னை... வைரலாகும் இளையராஜா பேட்டி!!

இதனையடுத்து பிரசாந்த் ஹீரோவாக நடித்த அந்தகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா நடித்திருந்தார். இந்த நிலையில் வனிதா தனது மகன் குறித்து அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில், என்னுடைய மூன்று குழந்தைகளையும் நான் கைகளில் வாங்கிய தருணம் ரொம்பவே ஸ்பெஷலானது. அதிலும் எனது மகன் ஸ்ரீஹரி பிறக்கும்போது அவனுக்கு கொடி சுத்திவிட்டது. அதனால் அவசரம் அவசரமாக அவனை வெளியே எடுத்தார்கள். அவன் பிறந்தபோது எனக்கு 19 வயதுதான் நடந்துகொண்டிருந்தது. அவர் குறித்த நாளுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டான்.

நான் கண்கள் விழித்ததும் உங்கள் பையன் ஐசியூவில் இருக்கிறான் என்று சொன்னார்கள். அது எனக்கு பயத்தை கொடுத்துவிட்டது. அதனையடுத்து அவனுக்கு பால் கொடுப்பதற்காக அழைத்து சென்றார்கள். அப்போது இந்த உலகத்தில் இதைவிட பெரிய சந்தோஷம் எதுவுமே இல்லை என்று எனக்கு தோன்றியது. நான் எனது அக்கா பிள்ளைகளை தூக்கி வளர்த்திருந்தாலும் என்னுடைய பிள்ளையை தூக்குகிறேன் என்று உணர்ந்தபோது நான் கண்கள் கலங்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியது இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: எப்படி உங்களால மனசாட்சியில்லாம பேச முடியுது.. நடிகர் மீது தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share