×
 

ஒவ்வொரு படமும் ஒரு பிரச்னை... வைரலாகும் இளையராஜா பேட்டி!!

இசைஞானி இளையராஜா கொடுத்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்ற குக் கிராமத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். ஹார்மோனியம் மூலம் இசைக்க கத்துக் கொண்டார். பின்னர் 21வது வயதில் பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்கத்தல் மேற்கத்திய இசையை கற்ற இவவர் இதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 700 படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார்.

அவரது இசையமைப்பில் கடைசியாக ஜமா, விடுதலை 2, தினசரி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அவற்றி தினசரி தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அவர் சமீபத்தில் தனது சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றினார். இந்தியாவிலிருந்து இளையராஜாதான் சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் ஆவார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார்கள். மேலும் லண்டனில் அரங்கேற்றிய அந்த சிம்பொனி இசையை தமிழ்நாட்டிலும் இசை கச்சேரி வைத்து வாசித்து காண்பிக்கப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: புகைச்சலை கிளப்பிய இளையராஜா - லிடியன் விவகாரம்… ஃபுல் ஸ்டாப் வைத்த சிஷ்யன்!!

இந்த நிலையில் அவர் கொடுத்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில், நான் இசையமைக்கும்போது ஒவ்வொரு ஸ்வரத்தின் இனிமையை ரசிக்கிறேன். அதன் காரணமாகத்தான் எனது பாடல்கள் மக்களுக்கு பிடிக்கின்றன. இசையால் இயக்குநரை திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது ஒரு வரையறைக்குள் அடங்கிவிடும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இசையமைத்தால் அதில் ரசனைதான் முக்கியமாக இருக்கும். நானே நல்ல ரசிகன் என்பதால்தான் நான் உருவாக்கும் பாடல்களை மக்களும் ரசிக்கிறார்கள்.

பத்திரிகை படிப்பது, டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஹாயாக இருந்தேன். நான் ஒரு திரைப்படத்துக்கு பின்னணி இசையமைக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வேன். ஒருமுறை 58 படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறேன். நான் இரண்டு நாட்களில் ஆறு பாடல்களுக்கான ட்யூன்கள் எல்லாம் கொடுத்திருக்கிறேன். புதிதாக யார் வந்தாலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் நினைப்பேன். அப்படித்தான் எனக்கு அறிமுகமில்லாத பாலு மகேந்திரா, மணிரத்னம் படங்களுக்கும் இசையமைத்து பாடல்களை உருவாக்கினேன். அனைத்து படங்களிலிருந்து கற்றுக்கொள்வேன். ஒவ்வொரு படமும் ஒரு பிரச்னை கொடுக்கும். அதிலிருந்து பாடம் பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் சிம்பொனி அரங்கேற்றம்... இசைஞானி இளையராஜா இமாலய சாதனை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share