×
 

சாய் அப்யங்கரின் அடுத்த பாடல்.. இந்தமுறை potatoface பெண்ணுடன் ஆட்டம், பாட்டம்...

உலக அளவில் இசை என்றால் அது திரையிசை அல்லாத இசை தான். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் சினிமாவின் பங்கு என்பது இசையில் மிகச்சிறிய அளவு மட்டுமே

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இசை என்றாலே அது திரையிசை தான். எம்எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் புதுப்புது இசை வடிவங்களை வழங்கி வருகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல் சுயாதீன இசைக்கலைஞர்கள் என்பது இங்கு அரிதே. 

ஆனால் சமீபகாலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சுயாதீன இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருவதும், மக்கள் அதனை ஏற்றுக் கொள்வதும் நடந்து வருகிறது. அந்தவகையில் சாய் அப்யங்கர் என்ற இளைஞரின் இரண்டு பாடல்கள் கடந்த 2 ஆண்டுகளாக தனிப்பாடல்களில் சக்கைப் போடு போட்டு வருகிறார். 

இதையும் படிங்க: உச்ச நட்சத்திரங்கள் முன்னிலையில் ..காதலியை கரம்பிடித்த தெருக்குரல் அறிவு..!

கடந்த ஆண்டு அவர் பாடி, இசையமைத்து வெளியிட்ட கட்சி சேர என்ற பாடலும், ஆச கூட என்ற பாடலும் யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தியது. சினிமா பாடல்களை விடவும் அதிகமுறை ஸ்பாட்டிபை செயலியில் கேட்கப்பட்ட பாடலாக கட்சி சேர இருந்தது. இதனைத் தொடர்ந்து பென்ஸ் என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சூர்யாவின் 45-வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஒருசில காரணங்களால் அவர் விலக, அந்த இடத்திற்கு சாய் அப்யங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்பது தமிழ் சினிமாவின் ஆச்சர்யங்களில் ஒன்று.

முழுநேர சினிமாக் கலைஞனாக சாய் அப்யங்கர் மாறிவிட்டாரோ என்று அவரது ரசிகர்கள் ஏங்கி வந்த நிலையில், அவர்களின் ஏக்கத்திற்கு தீர்வாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியாகி உள்ளது. திங்க் இன்டி நிறுவனம் சார்பில் சித்திர புத்திரி என்ற புதிய பாடல் ஒன்று ஜனவரி 31 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ டீசரில் சாய் அப்யங்கருடன், இன்ஸ்டா பிரபலமான potatoface என்ற பெயரில் அழைக்கப்படும் சமீஹா மரியம் நடித்துள்ளார். டீசரே பட்டையக் கிளப்புவதாக இளந்தலைமுறை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர். 

இதையும் படிங்க: இளையராஜா 2025 ப்ளான்.. அடேங்கப்பா, அசத்தலா இருக்கே...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share