×
 

உச்ச நட்சத்திரங்கள் முன்னிலையில் ..காதலியை கரம்பிடித்த தெருக்குரல் அறிவு..!

இளையராஜா தலைமையில் திருமாவளவன் முன்னிலையில் தனது காதலியை கரம்பிடித்தார் பாடகர் தெருக்குரல் அறிவு


கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான எஞ்சாய் என்சாமி என்ற பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் தெருக்குரல் அறிவு.தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ராப் பாடகர்களுள் ஒருவராக உள்ளார்  எஞ்சாய் என்சாமி . இப்பாடலை அறிவு எழுதி தீ மற்றும் அறிவு இணைந்து பாடினர். இப்பாடல் இதுவரி யூ டியூபில் 503 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி ரெய்டு பாடலை பாடினார், மாமன்னன் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபத்தின் பாடலான கோல்டன் ஸ்பாரோ பாடலை பாடிநிருந்தார். இது தவிர்த்து பல திரைப்பட பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.காஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற இசை குழுமத்தில் ஒரு உறுப்பினராவார். தெருக்குரல் மற்றும் வள்ளியம்மா பேராண்டி என இரண்டு இண்டெபெண்டண்ட் ஆல்பம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் தெருக்குரல் அறிவு அவரது நீண்ட நாள் காதலியான கல்ப்பனாவை இன்று கரம் பிடித்தார். சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு தனது காதலியான கல்பனாவை திருமணம் செய்து கொண்டார்.அதனைத்தொடர்ந்து சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுடன் எதிர்பாராத விதமாக சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின்போது இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ‘பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் செய்தார்..? த்ரிஷா அமைச்சராகப் போகிறார்..! மன்சூர் அலிகானின் வில்லங்கப் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share