×
 

தேசிய விருதை இப்படியும் கேட்கலாமா.. 'சாய் பல்லவி'யை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!

தனது பாட்டி கொடுத்த புடவையை கல்யாணத்துக்கு கட்டவா, இல்லை தேசிய விருதுக்கு கட்டவா என குழப்பத்தில் இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. 

மலையாளத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் 'சாய் பல்லவி' என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் தனியார் தொலைகாட்சி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தோல்வியை தழுவியவர் என்றாலும் இன்று இவரது நடனத்தையும் நடிப்பையும் பாராட்டத்தவர்கள் யாருமில்லை. இவை ஒருபக்கம் இருக்க, சாய் பல்லவி என்பதை விட இவரை புடவை பல்லவி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு போகும் இடம் எல்லாம் பாரம்பரியமாய் புடவையில் செல்வதால் அதற்கும் ரசிகர்கள் உண்டு.

அதுமட்டும் அல்ல சமீபத்தில் அவரது தங்கையின் திருமணத்தை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு நடத்தி வைத்தார். இந்த நிலையில், சாய் பல்லவி நடிப்பில் தண்டேல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை கோலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி தற்பொழுது ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்து கலக்கி வருகிறார். 

இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு போட்டியாக களம் இறங்கிய சாய் பல்லவியின் தண்டேல்.. ரசிகர்களின் கவனத்தை பெறுமா?

இதனை தொடர்ந்து, தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த சாய் பல்லவி, 21வது வயதில் அவரது பாட்டி தனது திருமணத்துக்காக புடவை ஒன்றை கொடுத்தாராம், அதனை பத்திரமாக வைத்திருப்பதாகவும், தனக்கு எப்பொழுது திருமணம் என்று தெரியாது. அதனால் தேசிய விருது போன்று நான் விரும்பும் உயரிய விருதை பெறும் போது அந்த புடவையை அணிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும்" என கூறியுள்ளார். என்னதான் பாட்டி கொடுத்த புடவையாக இருந்தாலும், அது சாய் பல்லவி கட்டுற புடவையாச்சே... என உயரிய விருதுக்காகவும் அதற்கு சாய் பல்லவி கட்ட போகும் புடவையை பார்க்கவும் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
 

இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் பிரபல நடிகர்...! கணவர் அரசியலில் 'பிஸி' மனைவி சினிமாவில் 'பிஸி'..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share