ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி... பதறும் அபிராமி.. என்ன நடந்தது? கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி போடும் திட்டம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருது.
அதாவது, சிவனாண்டி மாயாவிடம் மகேஷ் காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்லி, அவளை அனுப்பி வைக்கிறான். அதன் பிறகு சந்திரகலாவிடம் இந்த மாதிரி ஆள் தான் நமக்கு தேவை.. நான் செய்ய நினைக்குறதை யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இவங்களை வச்சி செய்துட்டு போய்டலாம் என்று திட்டத்தை சொல்கிறான்.
இதையடுத்து வீட்டில் சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் கல்யாணம் ஆன பிறகும் உங்க அம்மா ஏன் வரவே இல்லை என்று கேட்கிறாள். மேலும் உங்க அம்மா வீட்டில் தானே இருக்காங்க போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க என்று சொல்ல கார்த்திக் அவங்க கோவிலுக்கு போய் இருப்பதாக சமாளிக்கிறான்.
சாமுண்டீஸ்வரி எப்பவும் அவங்க கோவிலில் தான் இருப்பாங்க என்று கேட்க கார்த்திக் ஆமாம் அவங்களுக்கு பக்தி அதிகம் என சமாளிக்கிறான். பிறகு போன் செய்து தர சொல்ல கார்த்திக் வெளியே சென்று அம்மாவுக்கு போன் செய்து பேசி விட்டு சாமுண்டீஸ்வரியிடம் கொடுக்கிறான்.
இதையும் படிங்க: வேலையை காட்டிய மூலிகை பால்! கார்த்தியை நம்ப மறுக்கும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சாமுண்டீஸ்வரி சம்மந்தி கல்யாணம் ஆகி நீங்க ஏன் வரவே இல்ல.. உங்க பையனையும் பொண்ணையும் நீங்க ஆசிர்வாதம் செய்ய வேண்டாமா என்று கேட்கிறாள். நீங்க வீட்டில் தானே இருப்பீங்க நானே அவங்களை கூட்டிட்டு வரேன் என்று சொல்ல அபிராமி ஐயோ வேண்டாம் சம்மந்தி என பதறுகிறாள். நானே வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறாள்.
பிறகு அபிராமி கடவுளிடம் நான் அங்க போனா பிரச்சனை எதுவும் வர கூடாது என கடவுளிடம் வேண்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: கார்த்திக் கேட்ட கேள்வி? கோபத்துடன் முதலிரவுக்கு தயாராகும் ரேவதி - கார்த்திகை தீபம் அப்டேட்!