கேட்டப்ப உதவாமா இப்ப வந்து அழுவரதுல அர்த்தம் இல்ல... மூத்த பத்திரிகையாளர் காட்டம்!!
மனோஜ் குறித்த மூத்த பத்திரிகையாளர் வெங்கடேஷ் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜ்-க்கு சிம்ஸ் மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது சேத்துபட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 3 நாட்களாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மனோஜ் குறித்த மூத்த பத்திரிகையாளர் வெங்கடேஷ் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், மனோஜ் பாரதிராஜா நல்ல மனிதர்.
தன்னால் வெற்றி பெற முடியவில்லை என்ற அழுத்தம் தான் அவரை பெருமளவு பாதித்துவிட்டது. மிகுந்த பொருட்செலவில் தாஜ்மஹால் படம் எடுத்தார். பல விஷயங்களை போராடி செய்தும், பாரதிராஜாவால் மகனை பெரிய ஹீரோவாக கொண்டு வர முடியவில்லை. தான் பெரிய நடிகராக முடியவில்லையே என்ற வருத்தம், மனோஜ்க்கு அப்போதே இருந்தது. பிறகு டெக்னிக்கலாக கற்றுக் கொள்ளலாம் என்று மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்தார். அங்கு டைரக்ஷனை கற்றுவந்தும்கூட, மிகப்பெரிய அளவில் மனோஜால் டைரக்ஷனில் ஜெயிக்க முடியவில்லை. சிவப்பு ரோஜாக்கள் 2 எடுப்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டது, பூஜையும் போடப்பட்டது. ஆனால், அந்த படம் எடுக்க முடியாமல் தடங்கலாகிவிட்டது.
இப்படியே பல கஷ்டங்கள் மனோஜ்ஜை சூழ்ந்து கொண்டன. சொத்துக்களை பொறுத்தவரை அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால், கையில் பணம் இல்லை. பாரதிராஜா நடித்து வரும் பணம்தான் அவருக்கு பிரதானமாக உதவி வந்திருக்கிறது. அதேபோல, கையில் நிறைய கதைகளை வைத்து, சில நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் சென்று பார்த்திருக்கிறார். வாய்ப்பும் கேட்டுள்ளார். ஆனால், ஹீரோக்கள் பெருமளவில் மனோஜூக்கு ஒத்துழைப்பு தரவில்லை. தயாரிப்பாளர்களும் மனோஜ்ஜை கை தூக்கி விடணும் என்று நினைக்கவில்லை. ஆனால், இன்று மனோஜ் இறந்ததுமே எல்லாருமே வர்றாங்க, அஞ்சலி செலுத்தறாங்க, கண்ணீர் சிந்தறாங்க, புகழ்றாங்க. ஒரு மனிதன் வாழும்போதே நல்லது செய்யணும்.
இதையும் படிங்க: காற்றில் கலந்தார் நடிகர் மனோஜ்.. பெசண்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம்..!
ஒருத்தன் வாய்விட்டு உதவி கேட்கும்போதே, கைதூக்கி விட்டால், அத்தனை பேருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். அந்தவகையில், உதவி கேட்டு சென்றும், மனோஜின் வாழ்க்கைக்கதவு திறக்கப்படவில்லை. என்னதான் இருந்தாலும், ஒரு மனிதனுக்கு மன நிம்மதி முக்கியம். யாராவது ஒருவர் உதவியிருந்தால், மனோஜ்க்கு இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காது. 2 வாரத்துக்கு முன் பைபாஸ் நடந்து, வீட்டுக்கு வந்துள்ளார். உடல்நிலையும் தேறி வந்துள்ளது. நேற்று மாலை 3 மணிக்கு, முக்கியமான விஐபி ஒருவரிடம் மனம்விட்டு பேசிட்டு இருந்தாராம். அப்போது, அவரிடம் அழாத குறையாக தன்னுடைய பிரச்சனைகளை சொல்லி உள்ளார்.
அந்த விஐபியும், பாரதிராஜாவிடம் இதுகுறித்து பேசுவதாக சொல்லி, மனோஜ்ஜுக்கு ஆறுதல் சொல்லி உள்ளார். அடுத்த 2 மணி நேரத்தில் மனோஜ் இறந்துவிட்டார். ஆனால், மனோஜ் எந்த சர்ச்சைகளிலும் மாட்டிக் கொள்ளாதவர். தவறாக எங்கேயும் சிக்கிக் கொள்ளவுமில்லை. வாழ்க்கையில் ஜெயிக்க முடியாத அழுத்தம்தான் மரணம் வரை கொண்டு சென்றுவிட்டது. உதவி கேட்டு வந்தபோதே, யாராவது மனோஜ்க்கு உதவியிருக்கலாம். இன்னைக்கு வந்து அவரது சடலத்தை கண்டு கண்ணீர் வடிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவை ஆளும் நெட்பிளிக்ஸ்.. டெஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ருசிகரம்..!