சல்வார் அணிந்த சொர்க்கமே..! பிங்க் சல்வாரில் பளீச் என மின்னிய ஷிவானி நாராயணன்!
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன், தற்போது பிங்க் நிற சல்வாரில் தேவதை போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவி பல சீரியல் நடிகைகளை வெள்ளித்திரை நடிகைகளாக மாற்றியுள்ளது. பிரியா பவானி ஷங்கர், மஹாலட்சுமி, போன்ற நடிகைகளை தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றியவர் தான் ஷிவானி நாராயணன்.
பகல் நிலவு சீரியல் மூலம் 16 வயதிலேயே கதாநாயகையாக மாறிய ஷிவானி நாராயணன், பின்னர் கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்தார்.
இதையும் படிங்க: ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி ப்ரியா!
இந்த இரு சீரியல்களிலும் ஹீரோவாக நடித்த அசீம் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் காதலித்து வருவதாக ஒரு சர்ச்சை எழுந்தது. அசீம் விவாகரத்துக்கு காரணம் ஷிவானி என கூறப்பட்டதால் அதிரடியாக விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு தாவினார்.
இரட்டை ரோஜா என்கிற சீரியலில் நடித்த ஷிவானி பின்னர் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகி... பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் மூலம் அதிகம் கவனிக்கப்பட்ட ஷிவானி, அதன்பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமான கதாபாத்திரங்களுக்காக கார்த்திருக்கும் ஷிவானி நாராயணன், இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் மீண்டும் பிசியாகி உள்ளார்.
அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது பிங்க் நிற சல்வாரில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நான் சின்னத்திரையை விட்டு போக காரணம் இந்த சம்பவம் தான் - நடிகை காவியா ஓபன் டாக்..!