அஜித்தால் இல்லை எங்கள் பாடலால் தான் படம் ஹிட்..! இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன்..!
இளையராஜா செய்ததில் என்ன தவறு, படம் ஹிட்டாக எங்கள் பாட்டு தான் காரணம் என கூறியிருக்கிறார் கங்கை அமரன்.
நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார். இந்த படமானது தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
இப்படி இருக்க, திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இப்படம் மே 9 அல்லது 10ம் தேதி பிரபல ஓடிடியான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ரூ. 90 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தகவிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: AK தரிசனத்தை டீவியில் காண தயாராகும் இளசுகள்..! 'குட் பேட் அக்லி' படத்தின் ஓடிடி அப்டேட்..!
இந்த சூழலில், படம் மாசாகவும் உள்ளது அனைவருக்கும் பிடித்த படமாகவும் உள்ளது படம் வெற்றியும் பெற்று உள்ளது. இனி நமக்கு என்ன கவலை என இப்படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்க, அதில் மிகப்பெரிய பாறாங்கல்லை சமீபத்தில் போட்டார் இசையமைப்பாளர் இளையராஜா. அதன்படி, குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லரில் 'ஒத்த ரூபாய் தாரேன்' பாட்டை போட்டதுக்கு ஒத்த ரூபாய் வேண்டாம் ரூ.5 கோடி போதும் என இளையராஜா, இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இதற்கான சரியான விளக்கத்தை ஐந்து நாட்களுக்குள் தரவேண்டும் அல்லது படத்திலிருந்து பாட்டை நீக்க வேண்டும் இவை இரண்டையும் செய்யவில்லை என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் சினிமா வட்டாரங்களில் பலரது வசைப்பேச்சுக்கு ஆளாகி இருக்கிறார் இளையராஜா. இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார் கங்கை அமரன். சமீபத்தில் நடைபெற்ற விட்பா முதலாவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கங்கை அமரன், குட் பேட் அக்லி படத்திற்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் வைத்திருக்கிறீர்கள்.
அவர் போட்ட பாடலுக்கு எந்த கைத்தட்டல்களும் விழாமல் எங்கள் பாடலுக்கு மட்டுமே கைதட்டல் விழுகிறது. ஆக, எங்கள் பாடலை போட்டு நீங்கள் நடனம் ஆடினால் என்ன அர்த்தம். அப்பொழுது ஒரு உண்மையை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ரூ.7 கோடி சம்பளம் வாங்கி படத்திற்கு இசையமைத்தவரின் பாடல்கள் ஹிட் ஆகவில்லை. எங்கள் பாடலை போட்ட உடனே படம் ஹிட் ஆகிறது படத்திற்கு கைத்தட்டல் வருகிறது.
இப்படி எங்கள் பாட்டினால் படம் ஹிட் ஆகும்பொழுது எங்களுக்கும் ஏன் சம்பளத்தில் பங்கு கொடுக்க கூடாது. அதை கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? ஹிட் கொடுக்கும் அளவிற்கு இசையமைத்த எங்களிடம் பாட்டிற்கான அனுமதி வாங்க வேண்டும் இல்லையா? உண்மையிலேயே நீங்கள் மதித்து அனுமதி கேட்டிருந்தால் அண்ணன் இளையராஜா இலவசமாக பாடலை கொடுத்திருப்பார்.
கேட்காமல் பயன்படுத்தியதால்தான் அண்ணனுக்கு கோபம் வருகிறது. உண்மையில் வழக்கு தொடர்வது பணத்தாசையால் இல்லை. அது எங்களிடமே அதிகம் கொட்டிக்கிடக்கிறது. விதி என்று ஒன்று உள்ளது. ஹிட்டானது அஜித் படம் இல்லை, அதில் வந்த எங்கள் பாட்டு தான். உங்கள் இசையமைப்பாளரால் செய்ய முடியாததை எங்கள் பாட்டு செய்து படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது. ஆக அதை முறைப்படி கேட்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக கொடுத்திருப்போம்' என்றார்.
இதையும் படிங்க: AK என்றால் சும்மாவா..! ரேஸில் 2ம் இடம் பிடித்த அஜித்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!