×
 

மீண்டும் வருகிறது சுந்தரா டிராவல்ஸ்.... படம் பார்த்துக்கொண்டே பஸ்ஸில் போக தயாரா..!

சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்ற இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. 

சுந்தரா டிராவல்ஸ் படம் என்றால் அனைவரது நினைவிற்கு வருவது, வடிவேலு மற்றும் முரளியின் கலக்கல் காமெடிதான், ஒரு பஸ்ஸை மட்டும் வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பஸ் வைத்து ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிக்க நினைத்த கதாநாயகன் தொழில் கனவை மறந்து காதல் கனவை திறந்திருப்பார். பல போராட்டங்களுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முரளி எங்கு வாழ்ந்திருப்பார் என்ற சந்தேகத்தை போக்க மீண்டும் வருகிறது சுந்தரா டிராவல்ஸ் 2.

இயக்குநர் கருப்பு தங்கம் இயக்கத்தில் உருவாகி வரும் சுந்தரா டிராவல்ஸ் 2 படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், பன்றிமலை, தென்காசி, காரைக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள பதிவில், பாகம் ஒன்றில் வேலை செய்த அனைவரையும் வைத்தே இந்த படம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வடிவேலு மற்றும் மறைந்த நடிகர் முரளியின் கதாபாத்திரத்தில் கருணாஸ் மற்றும் கருணாகரன் நடிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: கவுண்டமணியை வம்பிழுக்க வடிவேலு என்ன செய்வார் தெரியுமா..! நடந்ததை உடைத்த இயக்குநர்..!

இதில் எத்தனை கதாபாத்திரங்கள் நடித்தாலும் கதையின் முக்கிய கதாப்பாத்திரமான பஸ்ஸை விலைக்கு வாங்கி படத்திற்கு ஏற்றாற்போல் தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 'ஈ பறக்கும் தளிகா' என்ற மலையாள படத்தின் ரீ மேக்கான படம் தான் 'சுந்தரா டிராவல்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: படத்தில் ஹீரோ இவர் தான்.. ஒரே போஸ்டரில் பாராட்டுகளை அள்ளிய சத்யா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share