×
 

படத்தில் ஹீரோ இவர் தான்.. ஒரே போஸ்டரில் பாராட்டுகளை அள்ளிய சத்யா..!

பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்தில் சக நடிகராக நடிக்க இருக்கிறார் துணை நடிகர் சத்யா.  

யாரா அந்த பையன் நான்தா அந்த பையன் என்பதை போல், போஸ்டரில் பிரபுதேவாவுக்கு சைடில் நின்று சைலட்டாக பாராட்டுகளை அள்ளியிருக்கிறார் நடிகர் சத்யா. சின்னத்திரையில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் காவல் துறை அதிகாரியாக நடித்த சத்யா, பிக்பாஸில் வாய்ப்பு கிடைக்க, சீரியலில் இருந்து விலகி பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அவர் மீது பெரிய அபிப்ராயம் மக்கள் மனிதில் இல்லாமல் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல, இவன் சேட்டை பிடித்த பையன்க.

சும்மா ஜாலிக்குலாம் இம்சை பண்ணுவான் என சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் நிலைகொண்டார். இப்படி இருக்க, தான் நடித்த சீரியலில் தனது கதாபாத்திரத்தை கைவிட்டு, தனது வெள்ளித்திரை கனவை நினைவாக்க அவர் தேர்தெடுத்த பிக்பாஸ் பாதை அவருக்கு கைகொடுத்து உள்ளது. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் முசாரி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சத்யா.

இதையும் படிங்க: தேசிய விருதை இப்படியும் கேட்கலாமா.. 'சாய் பல்லவி'யை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!

பிரபுதேவா உடன் ராணுவ வீரராக சத்யா நடிக்க இருக்கும் முசாரி திரைப்படம் கோடை விடுமுறையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் அருள்தாஸ், விடிவி கணேஷ், ஜான் விஜய், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், 'மாஸ்டர்' மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தில் ஹீரோ பிரபு தேவாவாக இருந்தாலும் இன்று அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது உன் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என ரசிகர்களும் பிரபலங்களும் சத்யாவை பாராட்டி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் பிரபல நடிகர்...! கணவர் அரசியலில் 'பிஸி' மனைவி சினிமாவில் 'பிஸி'..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share