த்ரிஷா முதல் ரம்யா கிருஷ்ணன் வரை... நடிகைகளுக்கு பார்ட்டி வைத்த சூர்யா - ஜோதிகா ஜோடி! என்ன ஸ்பெஷல்?
சூர்யா - ஜோதிகா ஜோடி தமிழ் திரையுலகை சேர்ந்த முக்கிய நடிகைகள் மற்றும் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் சூர்யா. நடிகை ஜோதிகாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தியா - தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
ஜோதிகா மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், தமிழ் நாட்டு மருமகளாக மாறிய பின்னர் சென்னையில் குடியேறினார்.
இதை தொடர்ந்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, சூர்யா - ஜோதிகா இருவரும் மும்பையில் குடியேற முடிவு செய்தனர். அதன்படி தற்போது மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட லக்சுரி அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கங்குவா படத்தால் ஞானவேல் ராஜாவுக்கு புது சிக்கல்... காப்பாற்றுவாரா சூர்யா?
பிள்ளைகளின் படிப்புக்காக சூர்யா - ஜோதிகா இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், இதற்க்கு அடுத்தபடியாக சூர்யா - ஜோதிகா இருவரும் பாலிவுட் திரையுலகிலும் வாய்ப்பு தேடி வருவதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது சென்னைக்கு வருவதையும் வழக்கமாக வைத்துள்ள இந்த ஜோடி... தற்போது தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முக்கிய நடிகைகள் மற்றும் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளனர்.
ஜோதிகா பிறப்பால் ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்றாலும், ரம்ஜான் போன்ற பண்டிகைகளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நாளை நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில், சூர்யா - ஜோதிகா இருவரும் பார்ட்டி வைத்துள்ளனர். இதில் த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ரம்யா சுப்பிரமணியம், பிருந்தா மாஸ்டர், விஜய் டிவி டிடி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாமதமாகும் சூர்யாவின் வாடிவாசல்... காரணம் இதுதானாம்!!