கங்குவா படத்தால் ஞானவேல் ராஜாவுக்கு புது சிக்கல்... காப்பாற்றுவாரா சூர்யா?
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தால் ஞானவேல் ராஜாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்ட நிலையில் சூர்யா உதவிகரம் நீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்து வெளியான படம் தான் கங்குவா. கடந்த ஆண்டு பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான இந்த படம், ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்றே சொல்லலாம். முன்னதாக இந்த படம் 2000 கோடி வசூலிக்கும் என்று ஞானவேல் ராஜா கூறியிருந்தார். சூர்யாவும் கங்குவா படத்தை பார்க்கும்போது இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என்று இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் மூக்கின்மேல் விரலை வைக்கும் என்று பில்டப் கொடுத்தார். இவர்கள் கொடுத்த ஓவர் பில்டப் படத்தை பிளாப் ஆக்கியது. இதனால் இந்த படத்தை நெட்டிசன்கள் பயங்கரமாக டிரால் செய்தனர்.
இந்த விமர்சனங்களை பார்த்து கடுப்பான ஜோதிகா, தனது இன்ஸ்டா பக்கத்தில் விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். இதுத்தொடர்பான அவரது பதிவில், நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும். இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.
பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை. படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: தாமதமாகும் சூர்யாவின் வாடிவாசல்... காரணம் இதுதானாம்!!
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் கங்குவா எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யாததால் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவுக்கு 143 கோடி ரூபாய் அளவில் கடன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கங்குவாவால் ஏற்பட்ட கடனை அடைத்தால் மட்டுமே ஞானவேல் ராஜாவால் கார்த்தியின் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஞானவேல் ராஜாவுக்கு உதவி செய்யும் வகையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்காக இரண்டு படங்களில் நடிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாகவும் அந்தப் படங்களுக்காக சம்பளம் எதுவும் வாங்கபொவதில்லை என்று நடிகர் சூர்யா கூறியதோடு, இரண்டு படங்களையும் தரமான படங்களாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததன் காரணமாக தெலுங்கு மற்றும் மலையாள இயக்குநர்களிடம் அவர் கதைகள் கேட்டுவருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜோரா ஹீரோயின்கள் வந்தாலும் ஜோதிகா போல வருமா...வயசானாலும் உங்க ஸ்டைல் உங்களை விட்டு போகல ஜோ...!