சிம்புவை கடுப்பாக்கிய அனிரூத்.. காரணம் இதுதானாம்.. சினிமா வட்டாரத்தில் கிசு கிசு!!
தனது படத்திற்கு இசையமைக்க அனிரூத் மறுப்பு தெரிவித்துவிட்டதால் நடிகர் சிம்பு அப்செட் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
தக் லைஃப் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்து வருகின்றார். ஒருபக்கம் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50 மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார் அவர் கடைசியாக நடித்து வெளியான பத்து தல என்ற திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின், கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்திருக்கும் தக்லைப் திரைப்படம் தான் வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு மற்றும் கமல் நடித்த இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
அடுத்தாண்டு STR 49 மற்றும் STR 51 ஆகிய திரைப்படங்கள் வெளியாகும். மேலும் சிம்புவின் திரைப்பயணத்திலேயே மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் STR 50 அடுத்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை அடுத்து தற்போது பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது உறுதியானது. படப்பிடிப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் மமிதா பைஜூ, கயாடு லோஹர், மிருணாள் தாஹூர் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விளம்பரங்களில் நடிக்கும் அளவிற்கு தள்ளப்பட்ட சிம்பு..! ரகசியத்தை உடைத்த சினிமா வட்டாரங்கள்..!
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய பார்க்கிங் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சிம்பு நடிக்க இருக்கும் படத்தை இயக்குவது உறுதியானதால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என சிம்பு கூறியதை அடுத்து எஸ்டிஆர் 49 படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது இதனால் சிம்பு அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 2016 ஆம் பிரேக் அப் பாடல் ஒன்றை செய்திருந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதனால் தான் அனிரூத் இசையமைக்க மறுப்பதாக ஒருதரப்பில் கூறப்படுகிறது. தற்போது பீக்கில் இருந்து வரும் அனிருத் மீண்டும் எஸ்டிஆர் உடன் இணைந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர் மறுத்துவிட்டதாகவும் ஒருதரப்பில் கூறப்படுகிறது.
அதனால் தான் மறுத்துவிட்டார் என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கட்சி சேர ஆல்பம் பாடல் பாடிய சாய் STR 49 படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவாவை பின்னுக்கு தள்ளிய சிம்பு..! இனி விஜய்க்கு அடுத்து STR தான்..!