×
 

மனோஜ் பாரதி, ஹூசைனி உடல் நல்லடக்கம்... சோகத்தில் தமிழ் திரையுலகம்!!

தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய ஹுசைனி மற்றும் மனோஜ் பாரதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கே.பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. இவர் விஜய்யின் பத்ரி படத்தில் நடித்து பலரின் கவனத்தை  ஈர்த்தார். இவர்  400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். கராத்தே பயிற்சியாளரான இவர், அரிய ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை தரமணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மரணத்துடன் போராடிய ஷிஹான் ஹுசைனி, நேற்று அதிகாலை 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஹுசைனியின் உடல் அடையாறில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு இன்று காலை ஆம்பூலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே இருக்கக்கூடிய காஜிமார் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் ஹூசைனியின் உடல் வைக்கப்பட்டது. இன்று காலை முதல் ஏராளாமான கராத்தே, வில்வித்தை வீரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அங்கு வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: கேட்டப்ப உதவாமா இப்ப வந்து அழுவரதுல அர்த்தம் இல்ல... மூத்த பத்திரிகையாளர் காட்டம்!!

இதனையடுத்து காஜிமார் பள்ளிவாசலுக்கு உறவினர்களால் சுமந்து செல்லப்பட்ட ஹுசைனி உடலானது, இஸ்லாமிய மத முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜ்-க்கு சிம்ஸ் மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது சேத்துபட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் கடந்த 3 நாட்களாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மனோஜ் பாரதியின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் மனோஜ் பாரதியின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரின் மறைவு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: கேட்டப்ப உதவாமா இப்ப வந்து அழுவரதுல அர்த்தம் இல்ல... மூத்த பத்திரிகையாளர் காட்டம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share