நடிகர் வடிவேலுக்கு சிங்கமுத்து வச்ச செக்... ஓ.கே. சொன்ன உயர்நீதிமன்றம்...!
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
பல யூ-டியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளையும் உண்மையில்லாத குற்றச்சாட்டையும் கூறியதாக நடிகர் வடிவேல் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஐந்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னை பற்றி அவதூறாக தொடர்ந்து இனிமேல் சிங்கமுத்து பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. மாஸ்டர் நீதிமன்றத்திற்கு இன்று வழக்கு விசாரணை வந்தபோது,
நீதிபதி நடிகர் வடிவேலுவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். ஏனென்றால் இது தொடர்பாக நடிகர் வடிவேலு ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: வைகைப்புயல் வடிவேல்- பி டி ஆர் திடீர் சந்திப்பு..! வடிவேலுவின் தீவிர ரசிகன் என புகழாரம்
இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 3:30 மணி அளவில் நடிகர் வடிவேலில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி இவரிடம் இவரது தரப்பில் உள்ள சாட்சியங்களை பதிவு செய்து கொண்டார். அப்போது சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன் இந்த வழக்கில் நடிகர் வடிவேலுவை நாங்கள் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய உள்ளது. எனவே எங்களுக்கு அவகாசம் வேண்டும் எனவே இந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் அங்கு குறுக்கு விசாரணை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்துக்கு தள்ளிவைப்பதாக உத்தரவிட்டார். மேலும் நடிகர் வடிவேலு, சிங்கமுத்து தரப்பில் குறுக்கு விசாரணை செய்து அனுமதி வழங்கிய நீதிபதி, இருதரப்பையும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வைகைப்புயல் வடிவேல்- பி டி ஆர் திடீர் சந்திப்பு..! வடிவேலுவின் தீவிர ரசிகன் என புகழாரம்