கங்குவா வாங்கிய அடி... கோட்டை விட்ட‘கோட்...’ டிக் அடித்த அஜித்?.. மீண்டும் இணைகிறதா மாஸ் கூட்டணி?
2025ல் ஒரு பெரிய வெற்றி கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அஜித் நினைக்கிறாராம்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ பட்த்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்க உள்ளது. சில மாதங்களில் அந்த படமும் நிறைவடைய உள்ளது. அஜித்தின் பிறந்த நாளான மே1-ல் இப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளது.
இந்த 2 படங்களுக்கு அடுத்து அஜித் நடிக்கும் படம் என்ன? அதன் இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆளுக்கு ஒரு பெயரை எழுதுகிறார்கள். இது குறித்து அஜித் தரப்பில் விசாரித்தபோது, “கைவசம் இருக்கிற 2 படங்களை முழுமையாக முடித்துவிட்டு கார் ரேசில் கவனம் செலுத்தப்போகிறார் அஜித். சில மாதங்கள் அல்ல, பல மாதங்கள் கார் ரேசில் பங்கெடுக்கப்போகிறார். அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஆகஸ்டில்தான் சினிமாவுக்கு வரப்போகிறார். அதனால், அடுத்த படம் குறித்து இன்னமும் முடிவெடுக்கவி்ல்லை.
அஜித்தை வைத்து படம் இயக்க சிறுத்தை சிவா, வெங்கட்பிரபு உட்பட பலர் போட்டியிடுகிறார்கள். இந்த பட்டியலில் கவுதம்மேனன், சில மலையாள, தெலுங்கு பட இயக்குனர்கள் பெயரும் அடிபடுகிறது. புதுமுகங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில்லை என்பதில் அஜித் தெளிவாக இருக்கிறார். அதனால், தனக்கு நெருக்கமான சிவா அல்லது வெங்கட் பிரபுக்கு அஜித் கால்ஷீட் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இரண்டு பேருமே வெற்றிக்காக ஏங்குகிறார்கள். தோல்விப் படம் கொடுத்துவிட்டு அஜித்தை வைத்து ஒரு வெற்றி படம் கொடுக்க ஆசைப்படுகிறார்கள். அதை புரிந்து கொண்ட அஜித், இவர்களிடம் ஃபயர் இருக்கும் என்று நினைத்து இவர்களின் ஒருவரை டிக் செய்ய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: மயிலு மகளின் காதல்... ரெய்னாவுடன் டேட்டிங்... ஸ்ரீதேவி மகளின் ரகசிய நெருக்கம்..!
அஜித் சம்பளம், பட்ஜெட் பெரிது என்பதால் ஒரு கார்ப்பரேட் கம்பெனிதான் படம் தயாரிக்க வாய்ப்பு. இன்னும் சில மாதங்களில் இதற்கான முடிவுகள் எட்டப்படும் ’’என்கிறார்கள்
கடந்த 10 ஆண்டுகளில் வீரம், விஸ்வாசம் வெற்றிக்குபின் அஜித்துக்கும் ஒரு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடித்த நேர்கொண்டபார்வை, வலிமை , துணிவு, விவேகம் போன்ற படங்கள் ஓகே ரகம். அதனால், 2025ல் ஒரு பெரிய வெற்றி கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அஜித் நினைக்கிறாராம்.
இதையும் படிங்க: ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?