டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.
முதலில் பாஜக ஆம் ஆத்மி இடையே நெருக்கமான போட்டி இருந்து வந்தாலும் போக போக ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகிக்க தொடங்கி விட்டது.

பாஜக முக்கிய தலைவர்களான தற்போதைய முதலமைச்சர் அதிஷி மணீஷ் சிசோடியாஆகியோரும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள். கெஜ்ரிவால் மட்டும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறார்.
இதையும் படிங்க: வீணாகிப்போன ராகுல், பிரியங்கா பிரச்சாரம்.! விழி பிதுங்கி நிற்கும் காங்கிரஸ் கட்சி
டெல்லியில் மொத்தம் 11 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் கணிசமான முஸ்லிம் சமுதாய மக்கள் வசிக்கிறார்கள்.
இதில் சீலாம்பூர், மதியா மஹால், ஓக்லா உள்பட பத்து தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. முஸ்லிம் ஆதிக்க தொகுதிகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி பலமாக இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சி கணிசமான வாக்குகளை பிரித்ததால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்து விட்டது. அத்துடன் ஒவைசி கட்சி பிரித்த வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக அமைந்து விட்டன.
ஆனால் காங்கிரஸ் ஒய் சி ஆகிய இரு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெற முடியவில்லை.
இதையும் படிங்க: பூஜ்ஜியத்தில் முடிந்த காங்கிரஸின் ராஜ்ஜியம்..! தலைநகரில் காலாவதியான எதிர்க்கட்சி..!