2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. இந்த நிலையில், அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவோன் கான்வேவை 6.25 கோடி ரூபாய்க்கும் ராகுல் திரிபாதியை 3.4 கோடி ரூபாய்க்கும் ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கும், ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கும் வாங்கியது.
பந்துவீச்சாளர்களான கலீல் அகமதை 4.8 கோடி ரூபாய்க்கும், நூர் அகமதை 10 கோடி ரூபாய்க்கும் வாங்கியிருந்தது. இவர்களில் நூர் அகமது மற்றும் கலீல் அகமது ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடி வருகின்றனர். மற்ற நால்வரும் படுமோசமாகச் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிஎஸ்கேவை இப்படி பார்த்ததே இல்லை.. பயிற்சியாளர், அணி நிர்வாகத்தை பொளந்த சுரேஷ் ரெய்னா.!!

இந்த ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 65 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, சிவம் துபே மற்றும் தோனி என ஐந்து வீரர்களைத் தக்க வைத்திருந்தது. ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் அளிக்கப்பட்ட நிலையில், அதில் 65 கோடி ரூபாயை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து வீரர்களுக்கு மட்டுமே செலவிட்டது. மீதமுள்ள 55 கோடியை வைத்து தான் மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்கியது. அதிலும் அஸ்வின், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவுக்கு பல கோடிகளை வாரி இறைத்தது.

இதுக்குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, நீங்கள் ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுலை விட்டுவிட்டீர்கள். அணி நிர்வாகமும் தலைமைப் பயிற்சியாளரும் நல்ல வீரர்களை வாங்குவதற்கு முயற்சி செய்யவில்லை. ஏலத்தில் சிறப்பாக விளையாடும் பல வீரர்கள் இருந்தனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களை வாங்கவில்லை. தங்களிடம் அதிக பணம் இருந்தும் சிஎஸ்கே அணி அதை செய்யவில்லை. இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்படி தடுமாற்றத்துடன் இருந்து நான் பார்த்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இறுதி வரை போராடி தோற்ற RR… 2 ரன்கள் வித்தியாசத்தில் LSG அபார வெற்றி!!