வெளியானது பிரதீப் ரங்கநாதனின் 4வது படம் குறித்த அப்டேட்... நடிகை யார் தெரியுமா?
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதனின் நான்காவது படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போடும் டிராகன் திரைப்படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், முதலில் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்னும் படத்தை இயக்கியிருந்தார். இது மெகாஹிட் அடித்தது. அதன்பின் அவரே நடித்து வெளியான லவ் டுடே படமும் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வந்த எல்ஐகே திரைப்படம் ரிலீசுக்கு தயாராகாத நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.
அடுத்ததாக அவரது புதிய படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதனின் நான்காவது படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்திஸ்வரன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
இதையும் படிங்க: கண்ணா மூன்று லட்டு தின்ன ஆசையா..! பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்..!
சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கி வரும் நிலையில், அவரது உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள புதிய படம் உருவாக உள்ளது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் சரத்குமார், பரிதாபங்கள் டிராவிட் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் பிரேமலு நடிகை மமிதா பைஜு தான் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே மமிதா பைஜு சூர்யா, தனுஷ், ஷங்கரின் மகன் அர்ஜித், விஷ்ணு விஷால் என பல நடிகர்களுடன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மாறியுள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை கயாடு லோஹர்... தமிழில் வரிசை கட்டும் படங்கள்.!