கடந்த திங்கள்கிழமை ஒரு சேனலுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அபு ஆஸ்மி பேட்டியளித்திருந்தார். அதில் “அவுரங்கசீப் இந்தியாவின் தங்கப் பறவை. அவரின் ஆட்சியின்போது இந்தியாவின் ஜிடிபி 24% வளர்ச்சி அடைந்தது என்று வரலாற்று அறிஞர் ராம் புண்ணியாமி தெரிவித்துள்ளார். ஆனால் வரலாற்றில் அவுரங்கசீப் குறித்து பொய்யான வண்ணம் பூசப்பட்டுள்ளது. அவுரங்கசீப் பல கோயில்களைகட்டியுள்ளார், கொடூரமான அரசராக அவுரங்கசீப்பை நான் நம்பவில்லை.

அதிகாரத்துக்காகவும், சொத்துக்காகவும்தான் அவுரங்கசீப் சண்டையிட்டார் மதத்தாக இல்லை என வரலாற்று அறிஞர் தெரிவித்தார். அவுரங்கசீப் ஆட்சியில் பணியாற்றிய ஊழியர்களில் 34% பேர் இந்துக்கள். மசூதிகளையும், கோயில்கள் இரண்டையுமே அவுரங்கசீப் இடித்தார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு..! ஆதரவாளர்கள் எதிர்ப்பு... கோவையில் பரபரப்பு..!
அபு ஆஸ்மி பேச்சுக்கு உத்தவ் சிவசேனா கட்சியிலிருந்தும், சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேயும் கடும் எதிர்ப்புடன் கண்டனம் தெரிவித்தனர். ஏக்நாத் ஷிண்டே சட்டப்பேரவையில் கூறுகையில் “ ஆஸ்மி வேண்டுமென்றே மகாராஷ்டிராவை அவமானப்படுத்துகிறார். ஆஸ்மி ஒரு துரோகி, இந்த அவையில் அவர் அமர்வதற்கு உரிமையில்லை. தேசப்பற்றாளர்களை அவமதித்தமைக்காக அவர் மன்னிப்புக் கோர வேண்டும், சாம்பாஜி மகாராஜாவை மட்டும் அவுரங்கசீப் கொல்லவில்லை, கொடூரமாக சித்தரவதையும் செய்தார். கோயிலை அழித்தார், அனைத்து மத மக்களையும், இந்துக்களையும் கொலை செய்தார்” எனத் தெரிவித்தார்.

சிவசேனா தலைவர் நரேஷ் மாஸ்கே தானே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், அந்த புகார் மரைன் டிரைவ் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அபு ஆஸ்மி மீது ஐபிசி பிரிவு 299, 302, 356(1), 356(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன்னுடைய கருத்துக்கு கண்டனங்கள் வந்ததையடுத்து எம்எல்ஏ அபு ஆஸ்மி அளித்த விளக்கத்தில் “வரலாற்று அறிஞர்கள் சதீஸ் சந்திரா, ராஜீவ் தீக்சித், ராம் புண்ணியானி, மீனா பார்கவா, அவாத் ஓஜா உள்ளிட்டோர் அவுரங்கசீப் குறித்து நல்ல விதமாக எழுதியுள்ளனர். ஆனால், அவர்களை தடை செய்யவில்லை, விமர்சிக்கவில்லை. ஆனால், சத்திரபதி சிவாஜி மகராஜ், சாம்பாஜி மகராஜ், பாலசாகேப் அம்பேத்கர் போன்ற பெருந்தலைவர்கள் பற்றி என் கனவிலும் அவதூறன கருத்துக்களை தெரிவிக்கமாட்டேன். யாருடைய மனது பாதிக்கப்பட்டிருந்தால் என் கருத்துக்களை திரும்பப் பெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவை இன்று கூடியதும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அபுஆஸ்மியை சஸ்பெண்ட் செய்யக் கோரி தீர்மானத்தை சட்டப்பேரவைவிவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டு வந்தார். அபு ஆஸ்மியின் கருத்துக்கள் அவையின் மாண்பைக் குலைத்துவிட்டன, ஆதலால் அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் வாக்களித்ததையடுத்து, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமைக்கும், அபு ஆஸ்மியை சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டெல்லி சட்டமன்றம் கூடியது.. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு...!